........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 669

அரிய ஞானம்!

அறிவின் அனுபவ வானம் மனிதனில்
பொறிக்கும் உயர்நிலை அரிய ஞானம்.
மனிதனில் அடங்கிக் கிடக்குமொளி
அனுபவ மின்சாரத்தால் பெறுமொளி.
உயிர் கலைந்து உடலழிந்தாலும்.
உலகோருக்கு ஒளிதருமுன் ஞானம்
அகத்தால் வீசும் ஞான ஒளி
முகத்தில் வீசுமன்பு ஒளியாய்.
அனுபவ அடுக்குகளின் பல பரிணாமம்
ஆசிரியனாக்கும் ஞானமாய் உன்னை.
உலக ஆசைகளின் மயக்கமற்ற
உணர்வே தெளிந்த ஞான உண்மை.

-வேதா. இலங்காதிலகம், ஓகுஸ், டென்மார்க்.

 

 

 

 

 

 

 

m

 

வேதா.இலங்காதிலகம் அவர்களது மற்ற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு