........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 670

கிழிக்கும் காகிதம் கூட!

நான் உன் வாசல் கடக்கும் போதும்
நீ என் வாசல் கடக்கும் போதும்
என் மனம் கட்டாயமாய் சொல்கிறது
என் வீட்டு வாசலில் நீ தான்
கோலம் போட ஏற்ற பெண் என்று ....

உன் மேல் கவிதை எழுதிவிட்டு
சரியாய் வராமல் கிழிக்கும்
காகிதங்கள் கூட என்னை
உபயோகமாய் பயன்படுத்தியதாய்
நன்றி உரை நவில்கின்றன ...

என் வீட்டுக்கு நீ வந்து முதன்
முதலாய் ஏற்றப் போகும் விளக்குடன்
தினந்தோறும் கவிதை பேசுகிறேன்
உன்னைச் சுட்டு விடாமல் இருப்பதற்காக ...

-ராசை நேத்திரன்.

 

 

 

 

 

 

 

m

 

ராசை நேத்திரன் அவர்களது பிற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு