........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 682

நினைவலைகள்!

அழகான சொற்கள்
வருணனை எச்சங்கள்
எல்லாமே
என் பாத்திரத்தின்
உள்ளிருந்து தீர்ந்துபோயிற்று.
சிறுவயது நினைவலைகள்
உன் மீதுதான்
கால்கடுக்க நிற்கிறது.
விளையாடி முடித்த
வேகத்தை
நுரையீரலுக்கும் மூக்கிற்கும்
இடையே
வேகமாய் பயணிக்கும்
மூச்சுக்காற்று
தந்தியடிக்க
ஓடி வந்து
உன் முதுகில்
வியர்வையோடு ஒட்டிய
அழகான பொழுது.
அழுக்கு
உன் மீது படுமென்று
நீ விரட்டியடித்த
பக்கங்களைப்
பத்திரமாய் வைத்திருக்கிறேன்.
அழிக்கவும் முடியவில்லை.
கிழிக்கவும் மனமில்லை.
வந்து சேராத தந்தியாய்
பாதியிலேயே நிற்கிறது.....

வளைக்க முடியா
வானவில்லாய்......
முடிவில்லா வினைகளின்
எச்சமாய்.......
அன்பின் தொகையாய்.....
வீறு கெடா
உடன்பாட்டுப் பெயராய்
உன் காதல்!

-முனைவர். வி. தேன்மொழி, சிங்கப்பூர்.

 

 

 

 

 

 

 

m

 

முனைவர். வி.தேன்மொழி அவர்களது பிற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு