........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 683

எப்போதோ... ஏதேதோ...?

ஏதோ எண்ணங்களில் ஊஞ்சல் கட்டி
உன் மஞ்சள் வதனத்தை தாலாட்டி
இமைகளை மூடிக் கொஞ்சம் கனவென்னும்
தேரேறிப் பறந்து வருகிறேன்....

உடலோடு ஒட்டிய நிழலாக என்னுள்ளம்
உன்னோடு ஒட்டிக் கொண்டு உலா வருகிறதே
மலரோடு கலந்த சுகந்தமாய் உன் ஞாபகங்கள்
நினைவோடு கலந்தென்னை வாட்டுகிறதே

பகலோடு சேர்ந்து ஒரு இரவு வருவதும்
இரவோடு பிறந்து ஒரு பகல் வருவதும்
இயற்கை என்பார் அறிவாயோ நீயும்
இனியவள் உந்தன் ஈர்ப்பும் அவ்வகையே

சிறகை விரித்தொரு சின்னப் பறவை
வானை அளந்து வருவது போல‌
அன்புத்துளியொன்றை நானும் உன்
இதயவானை அளந்து வர அனுப்பினேன்

இன்னும் என்னைப் புரியாமல் பூவை நீயும்
இமைகளை வெட்டி வெட்டி பார்க்கிறாய்
என் விழிகளுக்கு மட்டும் பேசும் சக்தியிருந்தால்
எப்போதோ....! எப்போதோ....!! ஏதேதோ...!!!

-சக்தி சக்திதாசன், லண்டன்.

 

 

 

 

 

 

 

m

 

சக்தி சக்திதாசன் அவர்களது இதர படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு