........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 691

நெசவாளர்.

ஆடையில்லா மனிதன்
அரை மனிதன் என்பார்கள்!
அவனியிலே அதன் பெருமை
சொல்லத்தான் முடிந்திடுமோ!
உணவின்றி பல நாட்கள்
இருந்தாலும் இருந்திடலாம்!
உடையின்றி ஒருநாளேனும்
இருக்கத்தான் முடிந்திடுமா!

மனிதகுலம் உலகினிலே
மிருகம்போல் திரிகையிலே
மானத்தைக் காப்பதற்கு
நீயன்றோ உடைதந்தாய்!
வண்ணவண்ண வகைகளிலே
ஆடைகள் குவிந்ததடா!
உலகத்தின் நாகரிகம்
உன்னால் உயர்ந்ததடா!

-எஸ். மெய்யப்பன், சென்னை.

 

 

 

 

 

 

 

m

 

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு