........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 690

ஒரு ரூபாய் நாணயம்.

மார்க்கெட் பயணத்தில்
மனதில் மனைவி வாங்கி
வரச்சொல்லிய அட்டவணையோடு
ஒவ்வொரு கடையாய்
கடந்து சொல்கிறேன்

இந்த மாத பட்ஜெட் இருப்பின்
அளவுகளை மனிதில் முனகியபடி

முதல் கடையில் மனைவிக்கு
பிடிக்கும் என்று பட்ஜெட் மீறிய
இங்கிலீஷ் காய் பை ஏறுகிறது

இரண்டாவது கடையில் மகனுக்கு
பிடிக்கும் என்று வஞ்சிரம் மீன்
துள்ளிச் சாகிறது

முன்றாவது கடையில் மகளுக்குப்
பிடிக்கும் என்றும் ஸ்ட்ராபெர்ரி
உள்வாங்கி கொள்கிறது பை

பொத்தாம் பொதுவாய் வாங்கிய
காய்கறிகளுடன் அப்பா அம்மாவுக்கு
பிடித்த சிலவற்றையும் பை ஏற்றித்
திரும்ப முயல்கிறேன் வீட்டுக்கு

எதிர்படுகிறார்கள் கை இழந்த
குழந்தையோடு பிச்சை எடுக்கும்
கால் ஊனமான அம்மா

கண் இழந்தும் பாடிப்
பிச்சை எடுக்கும் இன்னொருவன்

பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்ட
முதியவரின் பிச்சை

சட்டைப் பையில் இருக்கும் என் ஒரு ரூபாய்
நாணயம் கேட்கிறது என்னை
இந்த மூவரில் யாருக்கு
யாசகம் தரப் போகிறாய் என்று... !

-ராசை நேத்திரன்.

 

 

 

 

 

 

 

m

 

ராசை நேத்திரன் அவர்களது பிற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு