........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 702

விதி?

கானக் குயில் கண்டு
கல்லெறிவார் உண்டிங்கு
அரவம் தீண்டாது
தொல்லையேதும்
செய்யாத போது
பரிதி முளைக்காத வானம்
இருள் கவிந்து காணப்படும்
பாதையில் பூக்களைத் தூவுவர்
சிதையிலே தீயினை மூட்டுவர்
விடுகதை வாழ்க்கையாகிப் போனது
விடை சொல்ல வேண்டிய
தெய்வம்
மெளன விரதம் இருக்குது
வீதியிலே போகும் நாய்
விரட்டினால் தான் தெரியும்
நாம் எவ்வளவு வேகமாக
ஓடுவோமென்று
கற்பனைச் சிறகு விரிக்குது
கனவுலக கதவு திறக்குது
இசை மனதை வருடுது
தூக்கம் கண்களைத் தழுவுது
மழையை காற்று கலைக்குது
மின்னல் கண்ணைப் பறிக்குது
விதி வழியே வாழ்க்கை ஓடுது
சுக்கான் கை நழுவிப் போனது.

-ப. மதியழகன், மன்னார்குடி.

 

 

 

 

 

 

 

m

 

ப.மதியழகன் அவர்களது பிற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு