........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 704

நம்பிக்கை!

உயிரணைப்பின் ஆதரவு வேர்.
உயிரின் பலமான ஊன்றல்.
உணர்வின் கூட்டுச் செழிப்பு.
உலக முன்னேற்றப் பலம்.
அன்பு, எதிர்பார்ப்பின் நிமித்தம்
தென்பான கருத்தாய் ஊன்றும்
தன்முனைப்பான நல்லெண்ணம்
மின்னும் நல்லபிப்பிராயம் நம்பிக்கை.
மன இராச்சியம் வளர்க்கும்
மன்பதையின் அமுத தேவகானம்
மருள் நீக்கும் மந்திரம்,
மனித வேதம் நம்பிக்கை.
நம்பிக்கை வழியது வாழ்வு
தென்பற்றது அஃதிலா நீள்வு.
நம்பிக்கை பலமுடை நெம்புகோல்
அஃதிலா வாழ்வு பாழ்.
நம்பிக்கையோடு கையிணைப்போரை அன்புத்
தும்பிக்கையால் தாங்குவோர் நல்லோர்.
வீம்பின் கை ஓங்கினால்
நன்நம்பிக்கை மரிக்கும்.
இதயத்து ஊனம் பொசுக்கும்
உதயத்து வெள்ளி நம்பிக்கை.
நம்பி கை வைக்கும் செயல்
எம்பி இமயம் தொடட்டும்!

-வேதா. இலங்காதிலகம், ஓகுஸ், டென்மார்க்.

 

 

 

 

 

 

 

m

 

வேதா.இலங்காதிலகம் அவர்களது மற்ற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு