........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 705

குறுங்கவிதைகள்!

கொசு

மனிதர்களை
இரவில் தாக்கும்
போர் விமானங்கள்

மூக்குக் கண்ணாடி

மூக்கில் அமர்ந்து
கண்களுக்கு
உதவிடும் நண்பன்

லட்சியம்

உப்பிட்டவரை
உள்ளளவும் மற
சோறிடாதவரை

விரக்தி

விழுந்தது கழுத்தில் தாலி
அவனுக்கோ......
எழுந்தது முகத்தில் தாடி!

உரிமை

எட்டாத பழத்திற்கு
கொட்டாவி விடலாமே
ஏறித் தின்ற களிப்பால்
குரங்குகள்!

-முனைவர். மா. தியாகராஜன், சிங்கப்பூர்.

 

 

 

 

 

 

 

m

 

முனைவர். தியாகராஜன் அவர்களது பிற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு