........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 706

காதல்!

உணர்வுகள்
ஆட்சி செய்யும்
இடம்.
அந்த முதலாளித்துவ
சாலைகள்
சிந்தனைத் தேர் இயங்க
இடமளிப்பது இல்லை.
பகுத்தறிவைக்
கொன்று தின்று
கற்பனைகள்
சிறகடித்துப் பறக்கும்
சிருங்கார மண்டபம்.
ஹார்மோன்களின்
ஆரம்பப் பள்ளிக்கூடம்.
வேதனைகளை மறக்கடிக்கும்
கனவு மாத்திரைகள்.
காதல் பள்ளிக்கூடத்தில்
இளமையே மூலதனம்.
இங்குதான்
தன் பெயரே மறந்து போகும்
அதிசயம் நிகழும்.
மொழிகள் புரிய வைக்காத
உணர்வுகளை
கண்ணிமைகள் காட்டிக்கொடுக்கும்.
கால்கடுக்க நின்றாலும்
சிறகடிக்கும் அனுபவத்தில்
சிந்தனைகள் சிலுசிலுக்கும்.
தலை நரைத்துப் போனாலும்
மறக்க முடியா நினைவுகள்
தலை வருடும்.
இத்தனை பொக்கிசங்களையும்
பொதிந்து வைத்திருக்கும்
அதிசய ராகம்.

-முனைவர். வி. தேன்மொழி, சிங்கப்பூர்.

 

 

 

 

 

 

 

m

 

முனைவர். வி.தேன்மொழி அவர்களது பிற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு