........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 707

குறுங்கவிதைகள்!

குழந்தைகள்..!

அந்நாளில்
பெற்றோருக்கு
நாம் செய்த
குறும்புகளை
இந்நாளில்
நமக்கு
சுட்டிக் காட்டும்
அளவு கோல்கள்..!

யார் குற்றம்..?

முட்புதரில் சிக்கிய
முந்தானி..
இழுத்து எடுக்கவும்
வழி இல்லை
விட்டுப் போகவும்
விதியில்லை..
முதிர் கன்னியின்
திருமண ஆசை..!

சுகமான சுமைகள்..!

வாழ்க்கைச் சுமை
பாரம் தெரியவில்லை
வீட்டில் குழந்தையோடு
உப்பு மூட்டை
விளையாடும் போது...!

-பாளை. சுசி.

 

 

 

 

 

 

 

m

 

பாளை சுசி அவர்களது மற்ற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு