........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 715

காற்றே வருக!!

காற்றே வீசிடு! நன்றாய் வீசிடு!!
நாற்றம் ஒழிந்திட-
சாக்கடை நாற்றம் புதைந்திட-
குவிந்து கிடக்கும்
குப்பைகளின்
நாற்றம் முற்றும் மறைந்திட
தென்றல் காற்றே!
ஒதுங்கிடாதே!
எம் சூழலைத் தழுவியே
தூய்மையைத் தூவிடு!
நோய்கள் பரவிடாது
தூய காற்றைச் சுவாசித்திட
தென்றலே! எம்மை அணைத்திடு!!
பயங்கர தொற்றுக் காய்ச்சலை
பரப்பிடும் நுளம்புகள்
பெருகும் சாக்கடைகளின்
துர்வாடை மறைந்திட
மென் காற்றே வருக !
நன் காற்றே வருக!!

-கலாபூஷணம் எம். வை. எம் மீஆத், இலங்கை.

 

 

 

 

 

 

 

m

 

கலாபூஷணம் எம்.வை.எம்.மீஆத் அவர்களது பிற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு