........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 714

பாரதி!... பாரதீ!!

குயிலின்
குரலுக்குள் காதலைத்
தேக்கியவன்.
சங்கீத தாளத்தில்
தொடை தட்டிய
சத்தத்தில்
அந்நிய ஆட்சிக்கு
இறுதிச் சடங்கு
நடத்தியவன்.

எழுத்திற்கும் எண்ணத்திற்கும்
இடைவெளி இல்லா
இலக்கியச் சக்கரவர்த்தி!
அக்கினிக் குஞ்சுகளைக்
கக்கிய
எழுதுகோலும் கூட
பார்க்கும் விழி நீயெனக்கு,
பாயும் ஒளி நானுனக்கு...
என்று சிந்திய
நேசத்தின் மைத் துளியில்
நிச்சயமாக
சொக்கிப் போயிருக்கும்.

முப்பத்து ஒன்பதற்குள்
மூச்சை நிறுத்தியவனே!
உன் வீரத்தின் வித்தில்
விதைநேர்த்தியாகும்
தலைமுறைக்குக் காத்திருக்கிறது
கணிணியைக்
கவனிக்கும் அவசரத்தில்
மனிதாபிமானத்தைத்
தொலைத்து விட்ட
இப்புதிய யுகம்.

-முனைவர் வி. தேன்மொழி, சிங்கப்பூர்.

 

 

 

 

 

 

 

m

 

முனைவர். வி.தேன்மொழி அவர்களது பிற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு