........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 713

குப்பை போடலாமா?

இறைவா!
உண்ணப் பழமும்; உரிக்கத் தோலும்;
தின்னவாயும்; விழுங்க நாவும்; வைத்தாய்!
ஆனால்!.... நாங்கள்....
தோலை உரித்து வீதியில் வீசி சுவைத்து உண்டோம்!
பழத்தை இங்கே!
நாவின் ருசியில் விரல்கள் மறந்தன!
அதனால்.............
சாலையில் நடந்த சடுகுடு கிழவர்
வைத்தார் காலை! நேரமும் காலை!
வாழையின் தோலோ கிழவரைக் கண்டதா?
வழுக்கல் குணத்தால் சாய்த்தது அவரை!
அவரோ!
தாளாக் கால்வலி தன்னை வாட்ட
வைத்தியர் வீட்டை நாடிச் செல்லுகையில்
பழத்தோல் பட்டுப் பட்டென வீழ்ந்தார்!
முன்னம் கால்வலி இன்னும் முற்றி
முட்டி பெயர்ந்து ஐயோ பாவி!
எவனோ! பொறுப்பற்ற மூடன்
போட்ட தோலால் கால்வலியோடு
கால்வலி சேர்ந்து அரைவலியாகி
அடடா! முழுவலி மூண்டது!

மாந்தர்க்கு அறிவை வைத்த இறைவா!
ஏன் தான் தூய்மையை இவனே மறந்தான்!
என்றே புலம்பி கண்ணீர் வடித்தார்!
வாயில் சுருட்டு நீ விட்ட புகையால் இருட்டு!
ஒருவன் புகையை ஊதிட ஆங்கே விதியா!
பிறரை வீழ்ததுதல் புகையால்!
அணைக்காமல் வீசி அங்கொரு சாலையில்
சுருட்டை வீச எத்தனைத் துன்பம்!
கையால் வீச காலைச் சுடாதா? பிறர்க்கு!
சாலை முழுவதும் குப்பை சேர்ர்ந்தால்
சடுதியில் அதனால் வந்திடும் நோய்கள்!
உடலைப் பேணுதல் உனக்கு முக்கியம்!
ஊரைப் பேணுதல் உயிரினும் மேன்மை!
நாளைய உலகம் நம்மைப் போற்ற
சாலையைக் காப்பாய்!

கடலைப் பார்! எத்தனை அழகு!
கரையைப் பார்! எத்தனை அழுக்கு!
உன்னால் தானே!
மண்ணில் குப்பை? ஒருமுறை சிந்தி!
மறுமுறை மாற்று!

வானம் தூய்மை! சூ ரியன் தூய்மை!
நிலவு தூய்மை! பறவை தூய்மை!
யாவும் தூய்மை!
நீயும் தூய்மையாய் நிலத்தைச் செய்க!
நோயும் போகும்! நுழையா வியாதி!
மேன்மை பெருகும்! மேலும் உயர்வாய்!

-முனைவர். மா.  தியாகராஜன்.

 

 

 

 

 

 

 

m

 

முனைவர். தியாகராஜன் அவர்களது பிற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு