........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 712

காதல் கை கூடுமா?

புரியாத மொழியில்
எழுதப்பட்ட புத்தகம் நீ
அகராதி துணைகொண்டு தான்
அதைப் படிக்க முயல வேண்டும்
கங்கையில் குளித்தால்
பாவம் போகும்
உன் கண்கள் தொடுக்கும்
மன்மதன் பாணம்
காற்றுக்கு வேலி இல்லை
எந்த ஆடை அணிந்து வந்தாலும்
நீ தான் எந்தன் தேவதை
வாழ்க்கைப் பாதையில்
வழுக்கி விழுந்தேன்
நீ கரம் பற்றித்
தூக்கியதால் பிறவிப் பயனை
அடைந்தேன்
தூய காதல்
தோற்றம் பார்க்காது
வானம் என்றும்
தரையில் வீழாது
பார்வைகள் கவிதை பாடும்
வார்த்தைகள் ஊமையாகும்
தெய்வத் தாரகை
தேர் ஏறி வருவாள்
வடம் பிடிக்கும் எனக்கு
வரம் தருவாள்
அவள் புன்னகைத்தால்
பூக்கள் பூக்கும்
காதல் கைகூடுமா
என எனக்கு வேர்க்கும்.

-ப. மதியழகன்.

 

 

 

 

 

 

 

m

 

ப.மதியழகன் அவர்களது பிற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு