........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 711

நமது பாரதம்!

நமது நாடு நமது நாடு
இந்தியா என்று சொல்வோம்
எனது பெயர் உனது பெயர்
இந்தியன் என்று சொல்வொம்
புண்ணியம் நிறைந்த பூமி
புகழுடைய பூமியே
புவி மீது இந்தியாவிற்கு
ஈடு இணை இல்லையே!
சாதி சமயங்கள் இருந்தாலும்
சமத்துவம் கண்ட நாடிது
பூசல்கள் இருந்தாலும் புதுமை கண்டு
புரட்சி செய்த நாடிது
ஆன்மிகத்திலும் அறிவியலிலும்
அற்புதம் படைத்த நாடிது
வளமை நிறைந்த நாடிது- நல்ல
வனப்பு மிகுந்த நாடிது
தொல்லை கண்டு எல்லை கண்டு
வெற்றி முழக்கம் செய்தது
வில்லைக் கண்டு கல்லைக் கண்டு
கலைகள் பல செய்தது
கண்ணைப் போல்
மண்ணைக் காப்போம்
பெண்ணைப் போல் நாட்டை
போற்றி வளர்ப்போம்!

-விஷ்ணுதாசன்.

 

 

 

 

 

 

 

m

 

விஷ்ணுதாசன் அவர்களது மற்ற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு