........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 710

என்னைக் கேட்காதீர்கள்!

காதல்...
விசமென்று சொன்னார்கள்
நான் அவர்களைப் பைத்தியக்காரர்கள்
என்றேன்.
காதல்...
அமிர்தமென்றார்கள்
ருசித்துப் பார்த்தேன்.
தயவுசெய்து என்னிடம்
காதலென்றால் என்னவென்று
கேட்காதீர்கள்
ஏனென்றால்
நான்..
உணர்வுகளே இல்லாத
உடலுக்குள் சிக்கி
தவித்துக் கொண்டிருக்கிறேன்.

-மு. சந்திரசேகர், இராஜபாளையம்.

 

 

 

 

 

 

 

m

 

மு.சந்திரசேகர் அவர்களின் மற்ற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு