........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 709

பச்சைப்பசும் புல்வெளி!

சின்னக் குருகுகளின் கீச்சொலிகளில்
திளைக்கிறது கூடு.
அசைவிலும் நகர்விலும் திசையொன்றாகியே
ஈருயிர் ஓருயிராகினோம்
பச்சைக் கணுக்களில்
புதிதாய் மேலுமீருயிர் துளிர்த்திட
சிலிர்க்கிறது நந்தவனம்.
மிரளுகிற வாழ்வில்
சுழலும் பெரும்புதிர்
மெதுமெதுவாய் புரிபடத் தொடங்குகையில்
நிறைகிற பாற்குடம்
கன்றுகளைச் சுற்றுகிற
கறுப்பு வெள்ளைப் பசுவாக
சூழவிரியுது
பச்சைப்பசும் புல்வெளி.
போதுமோ நம் தோப்பினுள் பட்டாம் பூச்சிகள்
காற்றாய் கதிராய் கடலாய்
சிறகடிக்கையிலே
வாராதோ
உயிர்க்கரையை உரசிக் கடக்கிற
ஓவியக் குழந்தையாயும்..!

-எஸ்.பாயிஸா அலி.

 

 

 

 

 

 

 

m

 

எஸ். பாயிஸா அலி அவர்களது மற்ற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு