கவிதை: 719
முரசென்ன முரசு!

லஞ்சமும் ஊழலும் நாட்டினையே
நசுக்கிடப்பார்க்கும் தீவினைகள்
பஞ்சமும் பட்டினிச் சாவுகளும்
பாரதபூமியின் ஊழ்வினைகள்
ஊழ்வினைஎன்பது கூறைகுடில்
உதவிகள்செய்தால் ஒளிகிடைக்கும்
தீவினைஎன்பது பாறைகுடில்- அதற்கு
பீரங்கியொன்றே தீர்ப்பெழுதும்...
ஓட்டுப்பிச்சை வாங்கி நாட்டை
வேட்டையாடிக் கொண்டிருக்கும்
தீட்டுப்பட்டக் கூட்டதினர்முன்-திரு
ஓட்டில் பிச்சை வாங்கிவாழும்-மூட
மூட்டைப்போன்ற பிச்சைக்காரர்
கூட்டம் மேலன்றோ...
பேரறிஞர் பெருந்தலைவர்
போன்ற மேன்மக்கள்
பேருடனும் புகழுடனும்
ஆண்ட மண்ணிது..-இன்றோ
ஊரடித்து உலையில்போடும்
உத்தமர்களின்
உள்ளங்கையில் ஊறுகாயைப்
போல ஆனது -கங்கை
நீரைப்போன்றத் தூய்மையான
அரசியல்வாதி
நிஜத்திலிந்த நிலத்திலில்லை
என்னவேதனை?..
சீரியதோர் முறையிலிந்த
சிக்கல்களையேத்
தீர்த்துவிட்டால் அதுதானே
உலகசாதனை...
கயவர்களின் கரங்களிலேச் சிக்கிக்
கதறுதெந்தன் கருணைமிகு தேசம்
காவல்துறை நீதித்துறை எல்லாம் - சட்டத்தைக்
காப்பதாகச் சொல்வதெல்லாம் மோசம்
நூறு குற்றவாளிகளில் ஒருவன்
தப்புவதே சட்டத்திற்கு இழுக்கு - இங்கோ
நேரெதிராய் நடப்பதினாலன்றோ - நாட்டின்
முகம் முழுதும் மூடியது அழுக்கு...
ஊருக்குள் எத்தனைப்பேர்
குற்றவாளிகள் என்பது
ஒவ்வொருக் காவலரும்
உணர்ந்த சேதிதான் - உணர்ந்தும்
ஊமைகள் கண்டவொரு
கனவைப்போலவே - தம்
உள்மனதில்லவர்
மூடிவைக்கிறார்...
ஏனெனில் மேலிடம்
தரும் குடைச்சலால்
இல்லையெனில் குற்றவாளி
விடும் மிரட்டலால் - அதுவும்
இல்லையெனில் அவனளிக்கும்
காந்தி நோட்டினால்...
சாலைகளைப் பார்த்தால்
சாக்கடைப் போலிருக்கு - சாலைப்
போட்டவனின் வீடோ - தாஜ்
ஓட்டலைப் போலிருக்கு
தப்புசெய்ய யாரும்
வெட்கப்படவேண்டும்...
வெட்கமற்றப்பேரை
வெட்டிப்போடவேண்டும்...
சில்லுசில்லா சிறைபிடிக்க
சீனாக்காரன் துடிக்கிறான்
செல்லப்பிள்ளை போல இந்த
சிங்களனும் நடிக்கிறான் - விசப்
பல்லுபோனப் பாம்பு போன்ற
பாகிஸ்தானும் படுத்துறான்
பாரதத்தில் பாதிப்பேரு
பஞ்சத்தில தவிக்கிறான்
பாழாப்போற நாட்டைப்பற்றி
எத்தனைப்பேர் நினைக்கிறான் - இனி
லஞ்சம் கேட்போர்
நெஞ்சைப் பிளப்போம்
ஊழல் செய்வோர்
உயிரை எடுப்போம்
ஏய்த்துப் பிழைப்போர்
எலும்பை முறிப்போம்
தீமை செய்தால்
தீயில் சுடுவோம்...
வாக்களித்த மக்களவர்
சிக்கலினைத் தீர்த்திடவும்
துப்பில்லாதத் தூய்மையற்ற
அரசென்ன அரசு..
அப்படியோர் அரசிருந்தால்
அஞ்சிடாமல் உடனடியாய்
கொட்டிடாத புரட்சிஎனும்
முரசென்ன முரசு!
-ஆனந்தன்.
|