........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 718

பாளை.சுசி கவிதைகள்

விதவை...

இதயக் கோவிலில்
சிலையாகிப் போன
தெய்வத்துக்காய்
பொட்டு அழித்து
பூ துறந்து
வளையல் உடைத்து
வெள்ளை உடுத்தி
நித்தம் நித்தம்
கண்ணீர்ப் பூக்களால்
பூஜை செய்யும்
கோவில் சொந்தக்காரி...

கோபமா?

ஏய்! சிட்டுக் குருவி
உனக்கேன்
உன் மேல்
கோபம்? நீ
கார் கண்ணாடியில்
கொத்துவது
உன் முகம்..!

சமர்ப்பணம்.

மழலை பேசிய
முதற் சொல்
அம்மா:
அது கவிதை..
அதைக் கற்றுத் தந்த
முதற் கவிஞர்
அம்மா..
அம்மா
உன் பாதத்தில்
என் கவிதைகள்..!

-பாளை. சுசி.

 

 

 

 

 

 

 

m

 

பாளை சுசி அவர்களது மற்ற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு