........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 721

நாள் தோறும்...?

இரக்கமுள்ள மனசே!
உன்
இருதயத்தில் விழுந்தேன்
இறகில்லாமல்
பறக்க வைத்தாயே

கருணையின் கடல் நீ
என்று
தெரிந்த பின்னால் தான்
என்
வாழ்வெனும் படகில்
மிதந்து வந்தேன்
உனக்குள்

ஆயினும் தோழி
எனக்குமட்டும்
உன்
அன்பினில் ஒரு துளி
தரமறுத்தாய்..!

சிலருக்கு கடல் நீ.
எனக்கொரு துளியாய்
சுருங்கி விட்டாய்!

வாழ்வது சில நாள்
அதற்குள்ளே
பாசத்தைப் புரிவது
சிலர்தான்..!

நீ தூரத்திலே
ஒரு
புள்ளியாய்ப் போனாய்,
என் வானத்திலே
நீ தான்
நிலவானாய்..!

உன் பாதத்தின்
தடம் பார்த்து நான்
ஒவ்வொரு நாளிலும்
வருகிறேன்..
என் வருகையை
எதிர்பார்த்து நீ
என்றாவது
நிற்பாயா சொல்லு..?

-சம்பூர் சனா, புத்தளம்.

 

 

 

 

 

 

 

m

 

சம்பூர் சனா அவர்களது பிற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு