........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 722

வாழ்க்கை ருசி!

உயிர் வலி பிறப்பு
உணர்வின் உச்சம்
வெற்றியின் தொடர்ச்சி
தோல்வியின் பாடம்
காதலின் இயல்பு

அறிவின் பெருமை
அழகின் மென்மை
அன்பின் அருமை

ஆக்கத்தின் வெற்றி
தூக்கத்தின் ஆழம்
மௌனத்தின் அர்த்தம்

போராட்டத்தின் இழப்பு
கோபத்தின் உறுமல்
மகிழ்ச்சியின் சிரிப்பு

இசையின் அதிர்வு
இயற்கையின் அறிவு
கடலின் அமைதி
பயணத்தின் அடைதல்

உண்மையின் உயர்வு
ஊடலில் தேடல்

கவிதையின் கற்பனை
கவிஞனின் பொய்
கற்பின் அர்த்தம்
கவர்ச்சியின் எல்லை
கற்பணையின் நீளம்
கனவின் தொடர்ச்சி
மனதின் ஓட்டம்
வாழ்க்கையின் நிஜம்

இது எல்லாமும் இயல்பாய்......
ருசிக்கப்படுவதில்லை!

-ராசை நேத்திரன்.

 

 

 

 

 

 

 

m

 

ராசை நேத்திரன் அவர்களது பிற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு