........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 723

அவசரம்?

எழுத்துக்கள் வெடித்து
வார்த்தைகள் வழிந்தோடும்
காகிதத்தின் உஷ்னத்தில்
என் உறக்கம்!

காத்திருப்பின் கடிகாரமுட்களின்
நொடிப்பொழுது சத்தத்தில்
செதுக்குகிறேன் என்னை!

உறைந்த
வார்த்தை மிதவைகளின் கீழ்
மூழ்கி மூழ்கி
பரிசுத்தமாகிறேன் நான்!

குங்கும சூரியக்கதிரும்
மஞ்சள் மாலைப் பொழுதும்
கனவிலும் கொலு

விருக்கும்
என் கண்கள்!

வார்த்தைகள் எரிந்து
காயப்படுத்த வேண்டமென்ற
காகிதங்களின்
வெள்ளைக்கொடி போராட்டத்தால்
வருத்தம்!

என் இருகண்கள் அழுத
சுவடுகள் மறைந்தாழும்
ஒற்றைக்கண்ணால் அழும்
எழுதுகோலின் சுவடிருப்பதால் மகிழ்ச்சி!
எழுத நினைக்கும் வாசகமெல்லாம்
எங்கோ படித்ததாய்
ஏமாற்றம்!

சுமத்தலின் சுகமும்
பிறத்தலின் வலியும்
ஒருநொடியில் பலமுறைகள்!

எழுதிய நோட்டு புத்தகங்கள்
மூடி வைப்பதற்குள்
போர்வையில் உடல் போர்த்தும்
அவசரம்!

-தோழன் சபரிநாதன்.

 

 

 

 

 

 

 

m

 

தோழன் சபரிநாதன் அவர்களின் இதர படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு