........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 725

மரணத் தொட்டிலில் காதல்..!

காதல்
காயம் பட்டு
கண்ணீர் சிந்தி
அழுது கொண்டிருந்தது..

காயம் கழுவி
மருந்திட்டுக்
கட்டுப் போட்டது
மனசாட்சி..
கண்ணீர் துடைத்து
ஆறுதல் சொன்னது
நியாயம்..

உச்சி முகர்ந்து
உள்ளங்கை துடைத்து
சிந்தனை கலைத்து
வேதனை மறக்க
சிரிக்கச் சொன்னது
நீதி..

கவிழ்ந்த தலை
கையில் ஏந்தி
தைரியம் சொன்னது
நேர்மை..

நொந்து போன
நெஞ்சை
இதமாய்
வருடிக் கொடுத்தது
வாய்மை..

பாதுகாப்பாய்
பக்கம் நின்று
கண்ணீர் சிந்தியது
பாசம்..

ஆதரவாய்
அருகில் அமர்ந்து
அரவணைத்தது
அன்பு..

ஆயினும்,
தோல்வியின் மடியில்
சுவாசக் காற்றை
தொலைத்துக் கொண்டிருந்தது
காதல்..

காதலைப் பிரித்து
காயப் படுத்தி
களங்கப் படுத்திய
ஜாதியும், மதமும்
சமுதாயப் போர்வைக்குள்
குளிர்காய்ந்து கொண்டிருந்தன..!

-பாளை. சுசி.

 

 

 

 

 

 

 

m

 

பாளை சுசி அவர்களது மற்ற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு