........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 739

தொலைந்த வாழ்க்கை..!

பியூன் முதற் கொண்டு
பிரின்ஸ்பால் வரை
பின்னால் சென்று
கூழைக் கும்பிடு போட்டு
கெஞ்சிக் கூத்தாடி
இடம் வாங்கினார் அப்பா.
கல்லூரியில் கால் பதித்தான்,
மகன்..!

அதிகாலை கண்விழித்து
அடுக்களையில் அல்லல் பட்டு
வாய்க்கு ருசியாய்
ஆக்கிப் போட்டாள்,
அம்மா,
பசியறியாது மகன் படிக்க..!

கேட்ட பணத்தை
ஏன் என்று கேட்காது
கடன்பட்டுக் கொடுத்தார்
அப்பா,
மகன் நன்கு படிக்க..!

ஓடி ஓடி,
அவன் வேலையை
ஓய்வின்றி செய்தனர்,
உடன் பிறந்தோர்.
உயர் கல்வி
அவன் படிக்க..!

அவனோ,
சினிமா, சிற்றின்பம் என்று
சிரமப்படாமல் வந்த பணத்தை
சீரழித்து விட்டு...
இன்று
தொலைந்த வாழ்க்கையை எண்ணித்
துயர் கொள்கிறான்..!

-பாளை. சுசி.

 

 

 

 

 

 

 

m

 

பாளை சுசி அவர்களது மற்ற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு