........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 740

முதிரும் போது...?

துயரங்கள் மீறி
இயங்கப் பழகுங்கள்

இறகுகள் விடை பெற்றாலும்
நடக்கத் தொடங்குங்கள்

நீரின் போக்கைப் போல
வாழ்க்கை போகிறது
கடல் தேடி அல்ல
அணை தேடி
தேங்கிப் போனாலும்,
திறக்கும் வரை
காத்திருங்கள்
வெளி வரும் போது
சீறிப்பாயலாம்!
ஓடையாய்ச் சென்றாலும்
விளை பயிர்களை வளப்படுத்தலாம்

நிழல் தரும் குடை
வெயில் காய்ந்தே
நிழல் தருகிறது

பழம் கொடுக்கும்
மரம் கல்லடிபட்டே
முதிர்கிறது

உன் வாழ்க்கையும்
உணரப்படும் போது
நீ முதிரும் போது...
நீராய், நிழலாய், கனியாய்
குடையாய்... !

-ராசை நேத்திரன்.

 

 

 

 

 

 

 

m

 

ராசை நேத்திரன் அவர்களது பிற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு