........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 741

கண்ணீர் ஒத்தடம்!

எனக்கும் விருப்பம்
உன்னை மறந்து
வாழ்வதற்கு
ஆனால்
இதயம் என்னவோ
மறுக்கின்றது...!

உன்னை
நினைக்க மறந்து விட்டால்
உலகே
மரணித்து போகின்றது!

உன்னை மறந்து வாழும்
சரித்திரங்களை
உருவாக்கத்தான்
சந்தர்ப்பம் தேடுகிறேன்

உன்னைப் போல்
நானும் மறந்தால்
என்னைப் பார்த்து
நீ சந்தோசப் படுவதாக
நினைத்துக் கொள்வேன்

நான் மட்டும்
இவ்வாறு
சங்கடப்படுவதற்கா
நீயில்லாத வாழ்நாட்களை
எனக்குத் தந்தாய்?

ஒருவர் மனதை ஒருவர்
பற்றி எரிக்கும்
ஊதுவத்தியாக
அன்று நாம்
வாசம் கொடுத்தோம்
வாழ்ந்த தேசத்திற்கெல்லாம்

இன்று -

பலூனில்
அடைபட்ட காற்றாய்
கை சேதப்படுகின்றேன்
வசந்தத்தைத் தேடி
தினமும்!

ஒரு சொல்லாவது பேசாமல்
மௌனியாகி
தீயணைப்பு
செய்து கொள்கிறேன்
செல்லமாக
உன்
உறவை
நினைக்கும் போதெல்லாம்!

பற்றி எரியும்
மனதைப்
பற்றிக் கொள்ள
கண்ணீர்
ஒத்தடங்கள் தான்
மிச்சம் இங்கே...!

-சம்பூர் சனா, புத்தளம்.

 

 

 

 

 

 

 

m

 

சம்பூர் சனா அவர்களது பிற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு