........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 742

கேட்டுப்பார்?

எழுகின்ற அலையைக்
கேட்டுப்பார்
எத்தனை பேர்களை
முத்தமிட்டாய் என்று?

பொழிகின்ற நிலவைக்
கேட்டுப்பார்
எத்தனை பேருக்காக
தூது சென்றாய் என்று?

ஓடுகின்ற நதியைக்
கேட்டுப்பார்
எத்தனை பேர்களின்
தாகத்தைத் தீர்த்திருக்கிறாய் என்று?

விரைந்து செல்லும் கார்மேகத்தைக்
கேட்டுப்பார்
எத்தனை பாலைவனங்களை
சோலைவனங்களாக்கினாய் என்று?

வீசுகின்ற தென்றலைக்
கேட்டுப்பார்
எத்தனை பேர்களின்
தேகம் தொட்டாய் என்று?

இதழ் விரிக்கும் மலரைக்
கேட்டுப்பார்
எத்தனை பெண்களின்
கூந்தலை அலங்கரித்தாய் என்று?

காற்றிலாடும் மரங்களைக்
கேட்டுப்பார்
எத்தனை பேர்களுக்கு
நிழல் தந்தாய் என்று?

-ப. மதியழகன், மன்னார்குடி.

 

 

 

 

 

 

 

m

 

ப.மதியழகன் அவர்களது பிற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு