........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:75

பொய்யெதுவென்று புரிந்து கொண்டால்...

இல்லை இல்லையென
இருப்பவை அனைத்தும்
இல்லையெனச் சொன்னவன்
இல்லை இன்றிங்கே எனும்
இருக்கும் உண்மைதனை
இதயத்தால் உணர்ந்து
இயம்பியவன் தானிங்கு
இகத்தின் மெய்ஞானி

ஓடும் புளியம்பழமும்
ஒட்டாத உண்மைதனை
ஓடும் தண்ணீரும் அதனோடு
ஒட்டாத தாமரை இலையும்
ஒவ்வாத உண்மை வேறேது
ஒப்பவல்லாத ஞானவாழ்க்கை
ஒப்பவல்லோர் யார் மேதினியில் ?

மெய்கொண்டு நடமாடும் மாந்தர்
மெய்தனிலே உறங்கும் பொய்மையை
மெய்யாக அறியாமல் விரைகின்றார்
மெய்யறிவு கொண்டோர்கள்
பாலோடு கலந்திட்ட நீரைப்
பகுத்துண்னும் அறிவெதுவோ அதுவே
பாரினிலிலே இல்வாழ்க்கை வாழ்ந்தும்
படித்திடும் மெய்ஞான அறிவதுவும்

உள்ளத்தின் உள்ளே தோழா நன்றாக
உரசிப்பார் உண்மையின் வலு தெரியும்
உன்னை நீ அறிந்து கொள்ளும் சாத்திரங்கள்
உலகத்தில் உனக்காக உரைப்போர்கள்
உருவாகும் காலத்தில் மெய்ஞானம் விழித்திடுமே

மெய்ஞானம் என்று ஒன்றில்லை காண்பாய்
பொய்யெதுவென்று புரிந்து கொண்டால்
ஓடிப்புகுந்து கொள்ளும் உன்மனதில் மெய்ஞானம்
மதமென்று ஏதுமில்லை மனிதருக்குள் பிரிவுமில்லை
மனமென்னும் லயத்தில் அன்பென்னும் மொழிகொண்டு
மனிதத்தை அர்ச்சித்தால் அதுவே தெய்வம்
மறந்திடாதே இம்மாபெரும் உண்மையை....

-சக்தி சக்திதாசன், லண்டன்.         

 

 

m
 

சக்தி சக்திதாசன் அவர்களது இதர படைப்புகள

முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.