........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:78

என் நெஞ்சில் தமிழாட

இதயத்தின் ஓரத்தில் கொஞ்சம்
இனிமையென்னும் சாயம் பூசிடும்
இகத்தினில் சிறந்த மொழி
இனிய என் தாய்மொழியே

முகத்தினில் அல்லாடும்
முகாரியின் சோகமும்
முகிழ்த்திடும் சிரிப்பின்
முகவரியாய் துளிர்த்திடும்

விழித்திடும் பொழுதினில்
விளைந்திடும் புதுமையாய்
வியத்தகு நயங்களை தன்னுள்
விதைத்தது என் மொழி

செழித்திடும் வாழ்க்கையில்
செப்பிடும் தாரக மந்திரம்
செல்வத்தில் சிறந்ததாம் என்
செந்தமிழ்ச் செல்வமே

கழித்திடும் சோகங்கள்
களிப்புடன் மறையவே
கவிதைகள் புனைந்திட
கலசமாய் என் மொழியே

மொழித்திறன் இயற்கையாய்
முளைத்திடும் வகையினில்
மிளிர்ந்திடும் மொழி தமிழ்
மிதக்கிறேன் இன்ப வானிலே

பொழிப்புடன் கூடிய பல
புதுப்புதுக் கருத்துகள் கூற
புலத்தினில் சிறந்ததாம் எம் மொழி
பகன்றது உண்மை பாரீர்

பழித்திடும் பாவியர் தமை
பண்புடன் மன்னிக்கும் வகை
படிப்பினை போன்றே நமக்கு
போதித்தது என் மொழியே

சுழித்திடும் சொற்திறனுண்டு
சுந்தரத் தமிழ் மொழியதற்கே
சுதந்திர நினைவுகளாடும் வேளை
சுகமாய்த் தமிழ் என் நெஞ்சிலாட

-சக்தி சக்திதாசன், லண்டன்.

 

m
 

சக்தி சக்திதாசன் அவர்களது இதர படைப்புகள

முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.