........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:98

வாழ வழியில்லை என்றாலும்...

உன்னைக் காதலித்த நாட்களில்
கனவுகளை மட்டுமே என்
உலகமென நினைத்திருந்தேன்
ஒருதலைக் காதலால் என்னுள் நுழைந்தாய்
உன் ஒருத்தியை மட்டுமே என்
உயிராய் நினைத்திருந்தேன்.

என் உதடுகளில்
புன்னகையாய் மலர்ந்தாய்.....
என் கண்களுக்கு
தேவதையாய் தெரிந்தாய்
என் மனம் எனும்
பிருந்தாவனத்தில் ஒற்றை ரோஜாவாய்
கர்வத்தில் அலங்கரித்தாய்
உன்னை பார்க்கும் பொழுது
துடிக்காத இந்த பேதை மனம்
பார்க்காத வேளைகளில் துடிக்கிறது

என் காதலை உன்னிடம்
சொல்லத் துடிக்கும் மனம்
எங்கே சொன்னால்
மறுத்து விடுவாயோ
என்று தவிக்கின்றது
மறுத்துவிட்டால்
கல்லறையைத் தேடி நானும்
அப்பழியும் உன்னைச் சேருமே...

அன்புப் பெண்ணே...
உன்னுடன் வாழ
வழியில்லையென்றாலும்
உன் காதலுடன்
வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறேன்
என்றும் அழியாத பொக்கிஷமாய்
என்னுள் புதைந்திருப்பாய்
என்றென்றும்...

-த.சத்யா, இராஜபாளையம்.

 
m
 

த.சத்யா அவர்களின் இதர படைப்புகள

முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.