........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 

a

குறுந்தகவல்-121

இப்படியும் சில சாதனைகள்

  • ஆல்பர்ட் மெக் ஈவன் என்பவர் 56 வார்த்தைகள் கொண்ட கடவுள் வாழ்த்து செய்யுள் ஒன்றை 0.00016 x 0.0008 அங்குலம் அளவுள்ள டைமண்ட் பாயிண்ட் கண்ணாடி ஒன்றில் எழுதி சாதனை படைத்துள்ளார்.

  • 1968 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் ஃபிராங்க்வாட்ஸ் என்பவர் 0.84 x 0.71 அங்குல அளவுள்ள தபால்வில்லையில் கடவுள் வாழ்த்து ஒன்றை 34 முறை எழுதி சாதனை படைத்திருக்கிறார்.

  • பெஞ்சமின் பிராங்க்ளின் என்பவர் நடத்திய போஸ்டன் நியூஸ் லெட்டர் என்ற பத்திரிகை நட்டமின்றி நடக்க விளம்பரங்களைச் சேகரித்து வெளியிட்டார். இதுதான் விளம்பரங்களைக் கொண்டு வெளியான முதல் பத்திரிகை.

  • 1974 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல் நகரில் ஸ்காட்கோஸ் என்பவர் தன் வாயில் ஒரே சமயத்தில் 110 சிகரெட்டுகளை வைத்துக் கொண்டு 30 வினாடிகளில் ஊதித்தள்ளினார். இது உலக சாதனையாகி விட்டது.

  • உலகிலேயே அதிகமான படங்களில் நடித்த இணை கேரள நடிகர் பிரேம் நசீர் - நடிகை ஷீலா இணைதான். இந்த இணை மொத்தம் 130 படங்களில் இணைந்து கின்னசு சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கின்றனர்.

  • இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு நகரைச் சேர்ந்த ராய்மெண்ட் எல். காண்ட்வெல் என்பவர் தொடர்ந்து 505 மணி நேரம் தொடர்ந்து தன் கைப்பட கடிதம் எழுதி சாதனை படைத்திருக்கிறார். இவர் இந்த நேரத்தில் 3998 கடிதங்களை எழுதி கவரில் வைத்து முகவரியும் எழுதியிருக்கிறார். இத்தொடர்கடிதம் எழுதும் நிகழ்ச்சி 1978 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் நாள் முதல் செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி வரை நடைபெற்றது.

தொகுப்பு: தேனி. எஸ். மாரியப்பன்.

தேனி.எஸ்.மாரியப்பன் அவர்களின் இதர படைப்புகள

     முந்தைய குறுந்தகவல் காண

 

 

முகப்பு