........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

குறுந்தகவல்-17

உங்களுக்குப் புரிகிறதா?

உங்களுக்குப் புரிகிறதா?

திரு.வி.க. கண்பார்வை மங்கி படுக்கையிலிருந்த போது மணி பார்க்க(கேட்க) விரும்பி அருகிலிருந்த ஒருவரிடம் , " காமாட்சி கால அளவினைக் கடிதில் நோக்குக " என்று கூறினார்.

மணி பார்த்தவர் , " அஞ்சுமுகனொடு ஆறுமுகனும் அவன் குஞ்சு மணியினோடு குகனும் " என்றார்.

மணி என்னவென்று உங்களுக்குப் புரிகிறதா?

அஞ்சுமுகன்-5 , ஆறுமுகன்-6 , குஞ்சுமணி- 1/2 , குகன்- 3/4 , அதாவது மணி 11-3/4

அன்பளிப்பை புதுப்பிக்க முடியுமா?

பெர்னாட்ஷா ஒரு முறை பழைய புத்தகக் கடையில் புத்தகங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் எழுதிய நாடகங்களின் தொகுதி ஒன்று இருந்தது. அதை எடுத்துப் பிரித்துப் பார்த்தார். அது ஒரு நண்பருக்கு அவர் அன்பளிப்பாகக் கொடுத்த நூல். நண்பரின் பெயரை எழுதி அன்பளிப்பு என்று பெர்னாட்ஷாவே தம் கைப்பட எழுதியிருந்ததையும் பார்த்தார்.

உடனே பெர்னாட்ஷா அப்புத்தகத்தை விலைக்கு வாங்கி " அன்பளிப்பு " என்று எழுதியிருந்ததன் கீழே " புதுப்பித்த அன்பளிப்பு " என்று எழுதிக் கையெழுத்திட்டு அப்புத்தகத்தை எந்த நண்பருக்கு முதலில் கொடுத்திருந்தாரோ அந்த நண்பருக்கே மீண்டும் அனுப்பி வைத்தார்.

எழுத்தாளர்கள் எழுதும் மைகள்.

கலைவாணர் ஒருசமயம் எழுத்தாளர்கள் கூட்டத்தில் பேசும்பொழுது , எழுத்தாளர்கள் பேனாவை எப்படிப்பட்ட மையில் எழுதுகிறார்கள் என்று கேட்டால் வியப்படைந்து போவீர்கள் என்றார்.

சிலர் பெரு"மை" யில் தொட்டு எழுதுகிறார்கள். சிலர் பொறா"மை" யில் மூழ்கி எழுதுகிறார்கள். சிலர் பொய்"மை" யில் ஆழ்ந்து எழுதுகிறார்கள். பலர் பழ"மை" , கய"மை", அறியா"மை" போன்ற "மை" களில் தொட்டு எழுதுகிறார்கள்.

நல்ல எழுத்தாளன் உரி"மை", புது"மை" , உண்"மை", பொறு"மை", வறு"மை" ஆகிய பல்வேறு மைகளில் தொட்டு எழுதுகிறான்.

               தொகுப்பு: கணேஷ் அரவிந்த்,  திருநெல்வேலி-4

கணேஷ் அரவிந்த் அவர்களின் இதர படைப்புகள

முந்தைய குறுந்தகவல் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.