........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

குறுந்தகவல்-18

சின்னச் சின்ன செய்திகள்

  • வெட்டுக்கிளிகள் சுமார் 13 விதமான சப்தங்களை எழுப்புகின்றன. இந்த சப்தங்களின் மூலம் மற்ற வெட்டுக்கிளிகளுக்கு வெவ்வேறு செய்திகளைப் பரிமாறிக் கொள்கிறதாம்.

  • லாக்கா எனப்படும் பூச்சிகளின் உடலிலிருந்து வெளிப்படும் ஒரு வகைப் பிசின்தான் அரக்கு. உலக அளவில் இது இந்தியாவில்தான் 80 சதவிகிதம் கிடைக்கிறது.

  • பிராணிகளில் அதிக ஆண்டுகள் உயிர் வாழக்கூடியது ராட்சத ஆமைதான். இவை 300 ஆண்டுகளுக்கு மேல் உயிர் வாழும்.

  • யானைக்குட்டி பிறந்தவுடன் 125 கிலோ எடையிருக்கும்.

  • பாம்பு கடிக்கும் போது சுரக்கும் நஞ்சு 4 முதல் 6 துளிகள்தான்.

  • நெருப்புக் கோழி முட்டைகளை பகலில் பெண்ணும், இரவில் ஆணுமாக இரண்டும் அடைகாக்கின்றன.

  • ஒரு பட்டுப்பூச்சிக்கூடு சுமார் 3000 அடி நீளமுள்ள பட்டு நூலைத் தருகிறது.

  • நாய்களுக்கு வியர்வை நாக்கின் வழியாகத்தான் வெளியேறுகிறது. அதனால்தான் நாய் ஓடும் போது நாக்கை வெளியே தொங்கப் போட்டுக் கொண்டிருக்கிறது.

  • ஸ்லாத் எனும் மிருகம் தலைகீழாக நடக்கும். மேலும் இது தண்ணீர் குடிப்பதில்லை.

  • பூச்சியினங்களில் குறைவான ஆயுட்காலம் கொண்டது ஈ தான். ஆண் ஈ 14 நாட்களும், பெண் ஈ 29 நாட்களும் உயிர் வாழும்.

  • புத்திசாலியான 10 மிருகங்களுள் பன்றியும் ஒன்று.

  • கோல்டன் ஈகிள் எனும் கழுகு ஒரு சிறு முயலை ஆகாயத்திலிருந்து 2 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து பார்க்கும் சக்தியுடையது.

 தொகுப்பு: கணேஷ் அரவிந்த்,  திருநெல்வேலி-4

கணேஷ் அரவிந்த் அவர்களின் இதர படைப்புகள

முந்தைய குறுந்தகவல் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.