-
நெருப்புக்கோழி முட்டைகளை பகலில் பெண்ணும்
இரவில் ஆணுமாக இரண்டும் அடை காக்கின்றன.
-
இந்தியாவில் மட்டும் 80 வகையான தேள்கள் உள்ளன.
-
தாய்லாந்து நாட்டில்தான் தித்திக்கும் புளியம்
பழம் தரும் மரங்கள் இருக்கின்றன.
-
ஒளியானது வினாடிக்கு 1,86,000 மைல் வேகத்தில்
செல்லக்கூடியது.
-
நாம் ஒரு வார்த்தை பேச வேண்டுமானால் நம்
முகத்தில் 72 தசைகள் அசைகின்றன.
-
பசுவின் கொம்பிலுள்ள வளையங்கள் மூலம் அது
ஈன்றுள்ள கன்றுகளின் எண்ணிக்கையை அறிந்து கொள்ள முடியும்.
-
கரப்பான் பூச்சி உணவு தண்ணீரில்லாமல் ஒரு மாதம்
வரை உயிருடன் இருக்கும்.
-
மின்னல் ஒரு வினாடிக்கு 28,500 மைல் வேகத்தில்
பூமியை நோக்கிப் பாயும். ஒரு மின்னலின் போது 250 கோடி வோல்ட்ஸ் மின்சார சக்தி
இருக்கும்.
-
ஒரு இம்மியளவு என்பது 10,75,200ல் ஒரு பங்கு.
-
அமெரிக்காவின் மலைக் காடுகளில் வசிக்கும் ஒபாஸம்
எனும் பிராணிக்கும் கங்காருவைப் போல் அடிவயிற்றில் ஒரு பை இருக்கிறது.
-
எறும்புகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட
இனங்கள் இருக்கிறது.
-
நம் உடலில் சுமார் 639 தசைகள் இருக்கின்றன.
-
ஆப்பிரிக்காவில்
"தஜீரா" எனும் ஆறு தலைகீழாக ஓடுகிறது.
அதாவது அந்த ஆறு கடலில் உற்பத்தியாகி ஒரு ஏரியில் சங்கமமாகிறது.
-
கப்பல்களில் எடுத்துச் செல்லும் எடைகளை "அம்பாரே"
என்கிறார்கள்.