........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

குறுந்தகவல்-30

ஆண்களை விட பெண்களுக்கு மூளை குறைவுதான்

  • சுவர்க்கடிகாரத்தின் டிக்...டிக் ஒலியைக்கூட 40 அடி தூரத்திலிருந்து ஒரு நாயால் கேட்க முடியும். மனிதனால் அது முடியாது. கேட்கும் சக்தியை மனிதனை விட நாய் 100 மடங்கு அதிகம் பெற்றிருக்கிறது.

  • மின்னலின் போது ஏற்படும் மின்னழுத்தம் 5கோடி வோல்ட்ஸ்களுக்குச் சமம். மின்னோட்டத்தின் அதிகபட்ச அளவு 2 லட்சம் ஆம்பியர்களுக்குச் சமம்.

  • திரைப்படம் காட்டப்படும் வேகம் சாதாரணமாக ஒரு மணிக்கு 24 பிம்பங்களே.

  • வானொலி அலைகள் 100 கிலோமீட்டர் செல்வதற்கு 1/3000 வினாடி நேரமாகும். ஆனால் ஒலி 10 மீட்டர் செல்வதற்கு 1/34 வினாடி நேரம் எடுத்துக் கொள்கிறது.

  • ஒளியின் வேகம் வினாடிக்கு 3,00,000 கிலோ மீட்டர்.

  • ரேடியத்தின் ஆயுள் 32,000 ஆண்டுகள் என்கிறார்கள்.

  • ஒரு மனிதனின் சராசரி இரத்த அளவு 8000 C.C.

  • ஒவ்வொரு வினாடியும் பூமியை 100 மின்னல்கள் தாக்குகின்றன.

  • புவியீர்ப்பு விசையால் ஏற்படும் முடுக்கம் என்பது 9.8 மீட்டர்/வினாடி2

  • இந்திய திட்ட நேரம் 82.5டிகிரியில் அமைந்திருக்கும் அலகாபாத் நேரத்தையொட்டி கிரீன்வீச் நேரத்திற்கு 5.30 மணிகள் முன்னதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

  • சூரியனின் குறுக்களவு 8,64,060 மைல்கள். சந்திரனின் குறுக்களவு 2,160 மைல்கள்.

  • சூரிய கிரகணத்தின் கால அளவு 7 நிமிடம் 31 வினாடி.

  • பெண்களின் மூளை அளவு ஆண்களின் மூளை அளவைவிட 200C.C.குறைவு.

  • ஓர் ஒளியாண்டு என்பது ஓர் ஆண்டில் ஒளி செல்லும் தூரமாகும். இது சுமார் 6 லட்சம் கோடி மைல்களாகும்.

- கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி-4

கணேஷ் அரவிந்த் அவர்களின் இதர படைப்புகள

முந்தைய குறுந்தகவல் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.