........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

குறுந்தகவல்-33

பெயரை அடமானம் வைக்கலாம்.

 • பாரதியார் நூல்கள் ரஷ்யாவில் மட்டும் 74 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டன. ரஷ்யாவில் பாரதியாரைத் தெரியாதவர்கள் மிகக் குறைவு.

 • பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த "கவாக்யு" என்ற பூர்வீகக் குடிகள் தங்களுக்குப் பணம் கடனாகத் தேவைப்படும் போது தங்களது பெயரை அடமானம் வைக்கிறார்கள். கடனைத் திருப்பிக் கொடுக்கும் வரை கடன் வாங்கியவர் பெயரற்றவராக இருப்பார்களாம்.

 • தமிழ்நாட்டின் நெய்வேலி நகரில் கடுகுத் தெரு, மிளகாய்த் தெரு, வாழைக்காய்த் தெரு, கத்தரிக்காய்த் தெரு என்றெல்லாம் தெருக்களின் பெயர்கள் வைக்கப்பட்டிருக்கிறது.

 • உலகில் மிகக்குறைவான எழுத்துக்களை உடைய ஹவாய் எனும் மொழியில் பன்னிரண்டு எழுத்துக்கள் மட்டும்தான் இருக்கிறதாம்.

 • மகாத்மா காந்தியடிகள் நடத்திய "யங் இந்தியா" எனும் பத்திரிகையில் கடைசி வரை ஒரு விளம்பரம் கூட இடம் பெறவில்லை.

 • தாய்லாந்து நாட்டில் தித்திக்கும் புளியம்பழங்கள் கிடைக்கிறது.

 • உலகில் மிக நீளமான காதல் கடிதம் பிரிட்டிஷ் மியூசியத்தில் உள்ளதி. முதலாம் எலிசபத் ராணியின் அரண்மனையைச் சேர்ந்த சேவகர் ஒருவர் தன்னுடைய காதலிக்கு எழுதிய இந்தக்கடிதம் 400 பக்கங்கள் கொண்டதாம்.

 • இந்தியாவில் பேசப்படும் மொழிகளில் 826 மொழிகளுக்கு வரிவடிவம் கிடையாது.

 • ஒரு லிட்டர் யூகலிப்டஸ் எண்ணெய் எடுக்க 16 கிலோ இலைகள் தேவைப்படுகிறது.

 • ஒரு மனிதன் 72 ஆண்டுகள் வாழ்ந்தால் அவனது முழு வாழ்க்கையிலும் அவனது இருதயம் மூன்றாயிரம் மில்லியன் தடவைக்கு மேல் துடித்திருக்குமாம்.

 • ஒரு எஸ்கிமோ பெண் தலை முடியை சிகப்பு ரிப்பனால் கட்டியிருந்தால் அவள் கன்னிப்பெண். நீல ரிப்பனால் கட்டியிருந்தால் அவள் மணமானவள்.

 • இந்துக்களின் புனித நூலான பகவத்கீதை 76 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

 • 1939-ஆம் வருடக் கணக்கெடுப்பின்படி தமிழ் மொழியில் 1, 17,762 சொற்கள் உள்ளன.

 • இந்தியாவில் பெரியவர்களை ஸ்ரீ ல ஸ்ரீ என்று குறிப்பிடுகிறார்கள். இதற்கு அர்த்தம் லட்சம் முறை ஸ்ரீ என்று எழுதுவதற்குச் சமமானது என்கிறார்கள்.

-கணேஷ் அரவிந்த்.

கணேஷ் அரவிந்த் அவர்களின் இதர படைப்புகள

முந்தைய குறுந்தகவல் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.