........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
a |
a |
குறுந்தகவல்-37 ஒரு கொள்ளைக்காரனுக்கு மியூசியம்
விசில் பாஷை: துருக்கியைச் சேர்ந்த ஒரு கிராமம் கஸ்கோவ். இங்கு வசிப்பவர்களுக்கு பாஷை கிடையாது. விசில் அடிப்பதன் மூலம் ஒருவருக்கொருவர் விஷயங்களைப் பரிமாறிக் கொள்கிறார்கள். இங்கு பல நூற்றாண்டுகளாக விசில் பாஷை வழக்கத்தில் இருக்கிறதாம். ஆமை புகுந்தால் அதிர்ஷ்டம் ஆமை புகுந்த வீடு ஆகாது என்பது இந்திய நாட்டு நம்பிக்கை. ஆனால் சீனாவில் ஆமை புகுந்த வீடு அதிர்ஷ்டமானது என்கிறார்கள். இரண்டு நம்பிக்கைகளும் சரியானதில்லை என்கின்றனர் நாத்திகர்கள். தண்ணீருக்குப் பதில் பீர் பாரகுவே நாட்டில் உள்ள கைபி பெண்டி பள்ளத்தாக்கில் வாழும் சேன் எனும் பழங்குடிகள் தண்ணீர் அருந்துவதில்லை. அங்கே கிடைக்கும் ஏரி நீர் உப்பாக இருப்பதால் அங்கு விளையும் சோளத்தில் இருந்து பீர் தயாரித்து தண்ணீருக்குப் பதில் அருந்துகிறார்களாம். பேசாமல் இருந்த பெண் பிரான்சில் அடெலி என்பவள் 65 ஆண்டுகள் யாருடனும் பேசவில்லை. 1850-ல் தனது இருபதாம் வயதில் ஆங்கில மதகுரு ஒருவரின் மகனான ஆல்பிரட் பின்சென் என்பவனைக் காதலித்தாள். அவனையே திருமணமும் செய்து கொண்டாள். அவன் ஒன்றுக்கும் உதவாத சோம்பேறி. ஊர் சுற்றித் திரிந்த அவனை அடெலி திருமணம் செய்த சில நாட்களிலேயே அவளை அவன் வெறுத்துத் தள்ளி விட்டான். மனம் சோர்ந்த அவள் தன் தந்தையிடம் வந்து சேர்ந்தாள். தந்தையின் ஆறுதல் மொழி மகளின் மன வேதனையை மாற்றவில்லை. 1915-ல் அவள் உயிர் துறக்கும் வரையில் யாருடனும் துளியும் பேசவில்லை. அவள் புகழ் பெற்ற பிரெஞ்ச் எழுத்தாளர் விக்டர் ஹியூகோ என்பவரின் மகள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. சந்திரனுக்குக் கார் பயணம் சந்திரனுக்குக் கார் மூலம் போக முடியுமா? முடியாது என்று வேகமாகச் சொல்லி விடுவீர்கள். அப்படிப் போக முடியும் என்று வைத்துக் கொள்வோம். அதற்கு எவ்வளவு நேரம் ஆகும்? பூமியிலிருந்து சந்திரன் 3,84,000 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் காரில் போனால் சந்திரனை அடைய சுமார் ஆறு மாத காலம் ஆகும். மிக் வேகமாகச் செல்லும் ஜெட் விமானத்தில் போனால் 15 நாட்கள் பிடிக்கும். 28,000 கிலோ மீட்டர் வேகத்தில் போகும் ராக்கெட்டில் போனால் காலையில் கிளம்பி இரவிற்குள் சந்திரனுக்குப் போய் விடலாம். கொள்ளைக்காரனுக்கு மியூசியம் தலைவர்கள் நினைவாக மியூசியம் வைப்பது தெரிந்த விஷயம்தான். ஒரு கொள்ளைக்காரனுக்கு மியூசியம் இருப்பது உங்களுக்குத் தெரியுமா? அமெரிக்காவில்தான் அப்படியொரு மியூசியம் இருக்கிறது. அமெரிக்காவையே நடுங்க வைத்த "ஜான் டில்லிங்கர்" என்ற கொள்ளைக்காரன் நினைவாகத்தான் ஒரு மியூசியம் அமைக்கப்பட்டுள்ளது. அவனுக்குச் சொந்தமான துப்பாக்கிகள், கத்திகள், அவனது கொள்ளகள் பற்றிய பத்திரிகை செய்திகள் முதலியவை இந்த மியூசியத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன. -கணேஷ் அரவிந்த்.
|
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.