........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
a |
a |
குறுந்தகவல்-38 திருக்குர் ஆன் மனனம் செய்த சிறுவன்
துபாய் சர்வதேச திருக்குர்ஆன் மனனப் போட்டி 12 ஆம் ஆண்டாக இவ்வாண்டும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த 11 ஆண்டுகளாக துபாய் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அரங்கில் நடைபெற்று வந்த இப்போட்டிகள் இவ்வாண்டு மம்சார் பகுதியில் உள்ள கலாச்சார மற்றும் அறிவியல் சங்க அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்த திருக்குர்ஆன் மனனப் போட்டியில் முத்திரை பதித்த முதல் போட்டியாளர் கிழக்கு ஆப்பிரிக்காவின் புருண்டி நாட்டைச் சேர்ந்த பதினான்கு வயது நிரம்பிய நியாந்வி மஜலிவா. புருண்டி எனும் இவரது நாடு கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ளது. வடக்கே ருவாண்டாவும், தெற்கு மற்றும் கிழக்குப் பகுதியில் டான்ஸானியாவும், மேற்குப் பகுதியில் காங்கோ நாடும் உள்ளன. உள்நாட்டுப் போரின் காரணமாக இந்த நாடு போதிய வளர்ச்சியடையவில்லை. மேலும் இந்த நாடு உலகிலுள்ள பத்து ஏழை நாடுகளில் ஒன்றாக இருந்து வருவதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த நாட்டைச் சேர்ந்த நியாந்வி மஜலிவா அவருடைய தாயாரின் அறிவுரைப்படி திருக்குர்ஆனை மனனம் செய்யத் தொடங்கினாராம். பத்து வயதில் திருக்குர் ஆனை மனனம் செய்யத் தொடங்கிய இவர் 2007 ஆம் ஆண்டு அதை நிறைவு செய்திருக்கிறார். அரபி மொழி ஆசிரியரின் உதவியிருந்த போதிலும் இவரது தாயாரின் தூண்டுதலும் உற்சாகமும் இவரை திருக்குர்ஆன் முழுவதையும் மனனம் செய்ய மிகவும் துணை புரிந்திருக்கிறது. இவரது தகப்பனார் ஒரு சிறிய வணிகர் என்றும், காலை பஜ்ர் தொழுகைக்குப் பின்னர் பள்ளி செல்லும் வரையிலும், பின்னர் பள்ளி விட்டு வந்த பின்னர் சூரியன் மறையும் வரையிலும் இவர் திருக்குர்ஆன் மனனம் செய்யும் பணியில் முழுமையாக ஈடுபட்டு வந்ததாக இவர் சொல்கிறார். இவரது ஊரில் 62 சதவீதம் பேர் ரோமன் கத்தோலிக்கர் மதத்தையும் 8 முதல் 10 சதவீதம் பேர் முஸ்லிம் மதத்தையும் மீதமுள்ளவர்கள் கிறிஸ்துவ மதத்தின் பிற பிரிவுகளைச் சேர்ந்தோராகவும் இருக்கின்றனராம். இருப்பினும் இவர் திருக்குர் ஆன் முழுவதையும் மனனம் செய்து விட்டதற்காக இவரது ஊரில் மிகச் சிறப்பாக கௌரவப்படுத்தப்பட்டு இருக்கிறார். தகவல்: முதுவை ஹிதாயத்.
|
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.