........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
a |
a |
குறுந்தகவல்-44 கர்ப்பிணிகள் மாங்காய் சாப்பிடுவது ஏன்?
கொட்டாவி விடுவது ஏன்?
மிகவும் உயரமான மலைகளின் முகட்டில் நின்று கொண்டு கீழே தரையைப் பார்க்கும் போது பார்வைப் புலன்கள் மட்டும் தகவலை மூளைக்கு அனுப்புகின்றன. மற்ற புலன் உறுப்புகள் இதற்கேற்ப ஒத்திசைவான தகவல்களை மூளைக்கு அனுப்புவதில்லை. இதனால் மூளையில் குழப்பம் ஏற்பட்டு உடல் சமநிலை பாதிக்கப்படுகிறது. இதனால் தலைச் சுற்றல் ஏற்படுகிறது.
நமது கண்கள் வெளிச்சத்தைப் பார்க்கும் போது ரசாயணக் கிரியை நடந்து டிரான்ஸ்ரெடினின் எனும் பொருள் உண்டாகும். இருட்டினைப் பார்க்கும் போது, "ரெடாப்சினின்" எனும் பொருள் உண்டாகும். வெளிச்சத்திலிருந்து இருட்டுக்குள் நாம் நுழைந்தால் கண் தெரிய சிறிது நேரமாகிறது. இதற்கு இக்கிரியைகளே காரணம். ஒரு பெண்ணின் வயிற்றில் கரு வளரும் போது முதலில் இருதயம்தான் வளரும். இருதயம் வளர்வதற்குத் தேவையான சத்துப் பொருள் மாங்காயில் அதிகம் அடங்கியுள்ளது. இருதயம் வளரத் தேவையான சத்துப் பொருள் தேவைப்படும் போது அத்தேவையை நாக்கின் சுவையரும்புகள் கர்ப்பிணிப் பெண்களுக்குத் தெரிவிக்கின்றன. அதனால் உந்தப்பட்டு கர்ப்பிணிப் பெண்கள் மாங்காயை விரும்பிச் சாப்பிடுகின்றனர். கணேஷ் அரவிந்த்.
|
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.