........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

குறுந்தகவல்-43

உலக மக்களின் தண்ணீர் பயன்பாடு

  • பகவான் புத்தர் அவதரித்தது, போதிமரத்தடியில் ஞானம் பெற்றது, புத்தர் இந்த உலகை விட்டு மறைந்தது இம்மூன்றும் வைகாசி மாதம் பவுர்ணமி தினத்தில்தான்.

  • உலகிலேயே மிகவும் உயரமுடைய பழங்குடியினர் ருவாண்டா நாட்டில் வசிக்கும் வாட்டுஸி எனும் பழங்குடி மக்கள்தான். இவர்களில் ஆண்கள் சராசரியாக ஆறு அடி ஐந்து அங்குலம் வரையிலும், பெண்கள் சராசரியாக ஐந்து அடி பத்து அங்குலம் வரையிலும் உயரம் உடையவர்களாக இருக்கிறார்கள்.

  • உலகிலுள்ள மொத்த எரிமலைகளில் சரிபாதி எரிமலைகள் இன்னும் பொங்கி எரிந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த எரிமலைகள் பெரும்பாலும் பசிபிக் பெருங்கடலின் கரைகளைச் சுற்றியேதான் அமைந்துள்ளன.

  • கரையான்கள் துணிகளையோ, புத்தகங்களையோ நேரிடையாக அரிப்பதில்லை. அங்கு சென்றதும் அவை முட்டையிடுகின்றன. அந்த முட்டைகளிலிருந்து வெளிவரும் புது ஜீவன்கள்தான் சேதம் செய்கின்றன.

  • ஆண்டுதோறும் மழை மூலமும், பனி மூலமும் 97,000 கன் கிலோ லிட்டர் நல்ல தண்ணீர் பூமிக்குக் கிடைக்கிறது. இதில் 1.5 சதவிதம் தண்ணீர்தான் மக்களால் பயன்படுத்தப்படுகிறது.

  • அமேசான் நதி அட்லாண்டிக் பெருங்கடலில் மிக வேகமாகச் சென்று கலக்கிறது. இந்த வேகத்தால் அமேசான் நதியின் முகத்துவாரத்திலிருந்து கடலினுள் நூற்றிருபது கிலோ மீட்டர் தூரம் வரை இருக்கும் நீர் நல்ல நீராகவே இருக்கிறது. 

  • மொசாம்பிக் (Mozambique) நாட்டிற்கு ஒரு சிறப்பு அதன் பெயரில் இருக்கிறது. அதன் ஆங்கிலப் பெயரில் a, e, i,o,u ஐந்து வவ்வல்ஸ் (Vowels) இருக்கிறது.

  • பிரான்ஸ் நாட்டில் 24 மணி நேரத்தைக் காட்டும் கடிகாரங்கள் அதிகமாகப் பயன் படுத்தப்படுகிறது.

  • அச்சடிக்கப்பட்ட முதல் வங்கிக் காசோலை 1763-ஆம் ஆண்டு லண்டனில்தான் அறிமுகமானது. அங்கேயிருந்த ஹோர்சஸ் வங்கிதான் இந்தக் காசோலை முறையை அறிமுகம் செய்தது. 

  • ஆசியாவின் மிகச் சிறிய நாடான மாலத்தீவில் இரண்டாயிரம் சிறிய பவளத்தீவுகள் உள்ளன. இந்நாட்டின் பெரும்பாலான ஆண்கள் மீன்பிடிப்பதையே முழு நேரத் தொழிலாகக் கொண்டுள்ளனர்.

-கணேஷ் அரவிந்த்.

கணேஷ் அரவிந்த் அவர்களின் இதர படைப்புகள

  முந்தைய குறுந்தகவல் காண

 

 

முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.