........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

குறுந்தகவல்-46

சீர்காழி கோவிந்தராஜனுக்குக் கிடைத்த பட்டங்களும் விருதுகளும்.

தமிழ்த் திரை இசை, ஆன்மீகப் பாடகர் சீர்காழி கோவிந்தராஜன் இன்னிசைப் பாடல்களுக்காக தமிழ்நாட்டிலும் , உலகின் பல்வேறு பகுதிகளிலும் பல பட்டங்கள் மற்றும் விருதுகளைப் பெற்றிருக்கிறார். அவற்றில் முக்கியமான சில மட்டும் இங்கே... 

  • இசை மணி: சென்னை, தமிழ் இசைக் கல்லூரி வழங்கிய பட்டம். (1949)

  • சங்கீத வித்வான்: சென்னை, மத்திய கர்நாடக இசைக் கல்லூரி வழங்கிய பட்டம் (1951)

  • இசை அரசு: காரைக்குடி குன்றக்குடி ஆதீனம் (1971)

  • சிறந்த திரைப்படப் பாடகர்: தமிழக அரசு (1972)

  • இசைக்கடல்: சென்னை, பாரதி இளைஞர் மன்றம் (1972)

  • இன்னிசை அரசு: சென்னை, தமிழ்நாடு நல்வழி நிலையம் (1974)

  • தருமபுர ஆதீன இசைப்புலவர்: தருமபுர ஆதீனம் (1974)

  • கலைமாமணி: தமிழ்நாடு இயல்,இசை,நாடக மன்றம் (1975)

  • இன்னிசை வேந்தன்: சென்னை, கந்தன் கலை அகாடமி (1976)

  • சங்கீத பாஸ்கரா: புதுக்கோட்டை, ஸ்ரீ புவனேஸ்வரி ஆதிஸ்தானம், ஸ்ரீ சந்தானந்த சுவாமி (1977)

  • இசை திலகம்: ஸ்ரீ தியாகராஜா சங்கீத சபா (1977) 

  • இசைஞான பூபதி: லண்டன், பிரிட்டானியா இந்து சிவன் கோவில் அறக்கட்டளை (1978)

  • ஏழிசை வேந்தர் & கானாமிருத வரிதி: இலங்கை (1978)

  • பேரிசைமணி: மலேசியா, கோலாலம்பூர். சங்கீத அபிவிருத்தி சபா (1979)

  • இறை இசை வேந்தை: ஈரோடு, சேசசாயி காகித ஆலை கோவில் (1979)

  • மியான் டான்சன் விருது: புதுடெல்லி, டெல்லி துருபத் சங்கம் (1980) 

  • சங்கீத அகாதமி விருது: மத்திய சங்கீத நாடக அகாதமி (1980)

  • தமிழிசை மன்னர்: அமெரிக்கா, நியூயார்க் தமிழ் சங்கம் (1981)

  • காந்தர்வ கீதா வித்தகர்: பிரான்ஸ், பாரிஸ், ராமலிங்கர் பணி மன்றம்.(1981)

  • டி சிங்கெண்டன் ஹெர்சன் வான் இண்டியன் விருது: மேற்கு ஜெர்மனி, யோகா மையம்(ஜெர்மன்) (1981)

  • தமிழ்நாடு அரசவைக் கலைஞர்: பாரதியார் நூற்றாண்டுக் கொண்டாட்டங்கள் (1981)

  • இசைப் பேரறிஞர்: சென்னை, தமிழ் இசைச் சங்கத்தின் வருடாந்திர இசை விழா கவுரவம் (1982)

  • பத்மஸ்ரீ: மத்திய அரசு விருது (1983)

  • இசைத் தென்றல்: திருத்தணி, தியாகராஜ சுவாமி ஆராதனைக் குழு (1984)

  • இன்னிசை மணி: குரு ஞான சம்பந்தர் இறைப்பணி மன்றம் (1985)

  • கம்பீர கான இசை வேந்தன்: மதுரை, ஆர்ய வைஸ்ய பள்ளிகள்(1985)

  • அருள் இசை அறிஞர்: மொரிசியல் கல்வி & கழகச் சுற்றுலா (1987)

  • தமிழ் இசைப் பேரறிஞர்: பெங்களூர், தமிழ்ச் சங்கம் (1987)

  • முத்தமிழ்க் கலை மாமணி: சேலம், தமிழ்ச் சங்கம் (1987)

  • இசை மாமன்னர்: திராவிடர் கழகம் நடத்திய பாரதிதாசன் நூற்றாண்டு விழா (1987)

  • இசைப்பேரருவி: பிரான்சு, பாரிஸ், சித்தி விநாயகர் கோவில்.

  • கலாச்சாரத் தூதர்: சுவிட்சர்லாந்து, உலக அமைதிக்குழு மாநாடு.

-கணேஷ் அரவிந்த்.

கணேஷ் அரவிந்த் அவர்களின் இதர படைப்புகள

  முந்தைய குறுந்தகவல் காண

 

 

முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.