........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
a |
a |
குறுந்தகவல்-47 திரைக்கு வருகிறது வண்ணத்துப்பூச்சி.
ராசி அழகப்பன் என்ற பெயரில் பல கதை, கவிதைப் புத்தகங்களை எழுதி வெளியிட்டிருக்கும்
அழகப்பன்.சி கமல்ஹாசனிடம் உதவியாளராக இருந்தவர். இவர்
"வண்ணத்துப்பூச்சி" என்கிற பெயரில் குழந்தைகளுக்கான ஒரு படத்தை இயக்கியிருக்கிறார். நகரத்தில் வளரும் குழந்தையான ஸ்ரீலட்சுமி, தனது பள்ளி விடுமுறையில் கிராமத்திலிருக்கும் தாத்தா பாலசிங்கத்தின் வீட்டிற்கு வருகிறார். நகரத்தில் நான்கு சுவருக்குள் இருந்த அவளது வாழ்க்கை, கிராமத்தில் வண்ணத்துப்பூச்சியாக சிறகு விரிக்கிறது.
இப்படத்தில் பாலாசிங், ரேவதி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மதர் ஆர்ட்ஸ் இண்டர்நேஷனல்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ரோஹன் இசையமைத்திருக்கிறார். பி.எஸ். தரன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். குழந்தைகள் பற்றிய படமாகவோ, குழந்தைகளுக்கான படமாகவோ இருந்தால் தணிக்கை குழு ‘குழந்தைகள் படம்’ என்ற சான்றிதழை வழங்கும். பல வருடங்களாக இந்த சான்றிதழ் எந்த படத்துக்கும் வழங்கப்படவில்லை. தற்போது இந்த "வண்ணத்துப்பூச்சி’ படத்துக்கு தணிக்கை குழு, குழந்தைகளுக்கான பட சான்றிதழ் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. -தேனி. எம். சுப்பிரமணி.
|
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.