-
இடி மின்னலை வைத்து நீங்கள் இருக்குமிடத்திலிருந்து எவ்வளவு தூரத்தில் இடி
விழுந்தது என்று உடனடியாகக் கணக்கிட முடியும். இடியின் வேகம் மணிக்கு 1200
கிலோ மீட்டர். அதாவது வினாடிக்கு 1 கிலோ மீட்டர். மின்னல் தோன்றிய சிறிது
நேரத்திற்குப் பின்னர்தான் இடியின் சப்தம் கேட்கும். இந்த இடைப்பட்ட
நேரத்தைக் கண்டுபிடித்து மூன்றால் வகுத்தால் இடி எவ்வளவு தூரத்தில்
விழுந்தது என்பது தெரியும். உதாரணமாக மின்னலுக்கும் இடிக்கும் இடையே உள்ள
நேர வித்தியாசம் 27 வினாடிகள் என்று வைத்துக் கொண்டால் அதை மூன்றால்
வகுத்தால் வரும் விடை 9. அப்படியானால் 9 கிலோ மீட்டர் தூரத்தில் இடி
விழுந்தது என்று அறியலாம்.
-
1882-ல் டாக்டர் ஜிகோரா கானோ என்னும் ஜப்பானியர் ஜீஜிட்ஸூ எனும் தற்காப்புக்
கலையை மேம்படுத்தி ஜீடோவை உருவாக்கினார். ஜீடோ கலையில் மிக உயர்ந்த பட்டமான
"ஷிகான்" இன்று வரை யாருக்கும் வழங்கப்படவில்லை. அதிலுள்ள "ஜீடான்" எனும்
10வது டேன் பட்டமே உலகில் பத்துக்கும் குறைவான நபர்களுக்கே
வழங்கப்பட்டிருக்கிறது.
-
"ட்டுவாட்ரா" எனும் மிருகதிற்கு "பினீயல் ஐ" எனப்படும் மூன்றாவது கண் உள்ளது.
இந்த ஊர்வன இனத்தைச் சேர்ந்த ட்டுவாட்ராவின் உடல் வெப்பம் 11டிகிரி
மட்டும்தான். இம்மிருகத்தினால் ஒரு மணி நேரம் மூச்சை அடக்க முடியும். இதன்
முட்டை குஞ்சாவதற்கு 15 மாதங்களாகும். இதற்கு காலின பருவமடைய 20
ஆண்டுகளாகிறது. மேலும் வலி என்றால் என்னவென்றே இதற்குத் தெரியாதாம்.
கிட்டத்தட்ட 179 மில்லியன் வருடங்களுக்கு முன்பே அழிந்துவிட்டதாகக்
கருதப்பட்ட இந்த உயிரினம் நியூசிலாந்தில் இருப்பதாகக் கூறுகிறார்கள்.
-
அலாஸ்காவில் வாழும் நாய்கள் பலசாலியான நாய்கள். அந்நாட்டிலிருக்கும் லோபோ
என்ற நாய் இனம் 4500 கிலோ எடையுள்ள லாரியைக் கூட இழுக்கும் வல்லமையுடையதாம்.
-
பூமி மற்றும் பிற கிரகங்களில் கிழக்கில் தோன்றி மேற்கே மறையும். சூரியன்
வெள்ளி கிரகத்தில் மட்டும் மேற்கில் தோன்றுகிறது. ஏனெனில் பூமி
மேற்கிலிருந்து கிழக்காகச் சுழல்வது போல் வெள்ளி மட்டும் கிழக்கிலிருந்து
மேற்காகச் சுழலும்.ஒருமுறை பூமி தன்னைத்தானே சுற்றி வந்தால் அதை நாம் ஒரு
நாள் என்கிறோம். மேலும் பூமி ஒருமுறை சூரியனைச் சுற்றி வந்தால் ஒரு வருடம்
என்கிறோம். அந்த முறைப்படி பார்த்தால் வெள்ளி கிரகத்தின் வருடம் அதன் ஒரு
நாளை விட குறைவு. அது தன்னைத்தானே ஒருமுறை சுற்றி வர 5832 நேரமாகிறது. ஆனால்
ஒருமுறை சூரியனைச் சுற்றி வர அதற்கு 5400 மணி நேரமே ஆகிறது.
-
உலகின் மிகப்பெரிய சிகரம் எவரெஸ்ட் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அதன்
உயரம் கடல் மட்டத்திற்கு மேலிருந்து எடுக்கப்பட்டது. ஹவாயிலுள்ள மௌனகியா
எனும் மலையின் உயரம் கடல் மட்டத்திற்கு மேல் 4205 மீட்டர்தான். ஆனால் அது
தோன்றும் கடலின் அடிப்பகுதியிலிருந்து கணக்கெடுத்தால் அதன் உயரம் 10,203
மீட்டர். இது எவரெஸ்ட் மலையை விட 1, 355 மீட்டர் கூடுதல் உயரமாகும்.