........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
a |
a |
குறுந்தகவல்-55 மக்கள்தொகை அதிகரிப்பால் பாதிப்பு
1798 ஆம் ஆண்டில் உலக ஜனத்தொகையின் எண்ணிக்கை மிகவும் குறைந்து காணப்பட்டது. அந்தப் பொழுதில் ஒவ்வொரு நாட்டிலும் உணவுப் பொருள்கள் தேவைக்கு மீறி கிடைத்தாலும் அதை உண்பதற்கு போதிய ஜனத்தொகையில்லாமல், உணவுப் பொருள்கள் எஞ்சி வீணாகிச் சென்றது. அன்றைய பொருளாதார நிபுணர் மால்தஸ் என்பவர் ஒவ்வொரு நாடும் ஜனத்தொகையின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். 19ஆம் நு}ற்றhணடில் உலக ஜனத்தொகை அதிகரித்தது. ஒவ்வொரு நாடும் கூடுதலான ஜனத்தொகையையும் கவனித்துக் கொண்டதால், நாட்டினுடைய உணவுப் பொருள்கள் வளரும் ஜனத்தொகையோடு சரிசமமாக நின்றுவிட்டது. ஆனால் இதற்கும் மீறி ஜனத்தொகை அதிகரித்தால் உலகத்தில் பசியும் பட்டிணியும் நடமாடுவதை தடுக்க முடியாது. அப்படிப்பட்ட நிலையையும் ஒவ்வொரு நாடும் பார்க்க நேரிட்டது. இன்றும் வளர்ச்சியடையாத நாடுகளில் மக்கள் உணவைப் பார்த்துப் பல நாட்களாகி விட்டன. அடிப்படை வசதியில்லாமல் வாழ்ந்து வரும் ஜனத்தொகையின் நிலமை மிகவும் மோசமாகியிருப்பது நம்மை சிந்திக்க வைக்கிறது. அந்த நாடுகள், ஒரு பக்கம் பஞ்சத்தின் பிடியில் சிக்கித் தவிப்பது மட்டுமில்லாமல், மறுபக்கம் கலவரம், வன்முறை போன்ற சம்பவங்களையும் காண நேரிடுகின்றன. எல்லைமீறி அதிகரிக்கும் ஜனத்தொகை ஒவ்வொரு நாட்டினுடைய முன்னேற்றத்தையும் குன்றச் செய்கிறது.
உழைக்கும் கரங்களை அதிகரிக்க வேண்டுமென்று கட்டாயப்படுத்திய அன்றைய
பொருளாதார நிபுணரான மால்தஸ் என்பவர் ஜனத்தொகையை எவ்வளவு அளவு அதிகரிக்க
வேண்டுமென்று திட்டவட்டமாக சொல்லாமல் பாதியோடு கருத்தை வெளிப்படுத்தியதால்,
இன்று பல நாடுகள், அளவுக்கு மீறி உழைக்கும் கரங்களை அதிகரித்ததால், வேலைத்
திண்டாட்டத்தை சந்திக்கிறது. மக்கள் படித்த படிப்பிற்கு வேலைவாய்ப்பில்லாமல்
மன உளைச்சலுக்கு ஆளாகி தவறான எண்ணங்களை வளர்த்துக் கொண்டு ஒரு நாட்டிற்குக்
களங்கத்தை உருவாக்குவதிலும் தயங்குவதில்லை. வரம்பில்லாத ஜனத்தொகை ஒரு
நாட்டிற்கு தேவையில்லாத பாதிப்பைக் கொடுக்கிறது. இதனால் சமூகத்தில் கொலை,
கொள்ளை, அடிதடி, மதக்கலவரம், சாதிப்பிரச்சனை போன்ற சம்பவங்கள் அடிக்கடி
நிகழ்கின்றன். இதனால், ஒவ்வொரு நாடும், இத்தகைய பிரச்சனைகளைத் தீர்த்து
வைப்பதில் பொன்னான நேரத்தை செலவழிப்பது கட்டாயமாகியுள்ளது. நாட்டின்
முன்னேற்றத்திலும், வளர்ச்சியிலும் அதிக அக்கறை செலுத்த முடியாமல்
மறுபடியும் பின்நோக்கி பழைய காலத்திற்கு செல்கிறது. ஒவ்வொரு நாடும்
ஜனத்தொகையைப் பெருக்காமல், வேலை வாய்ப்பை பெருக்குவதற்கு முயற்சிகள் எடுக்க
வேண்டும்.
-சந்தியா கிரிதர், புது தில்லி.
|
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.