........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

குறுந்தகவல்-56

சாக்ரடீஸ் தர்க்கம் மனைவியிடம் எடுபடவில்லை.

1. பறவை இனங்களில் ஆந்தையின் முட்டை மாத்திரமே உருண்டை வடிவில் இருக்கும்.

2.
துளசியும் அரசமரமும் இரவு வேளைகளிலும் ஆக்சிசனை வெளிப்படுத்தும் தாவரங்கள்.

3. இலங்கையில் முதன்முதலாக உற்பத்தி செய்யப்பட்டு 2003 நவம்பரில் மோட்டார் வாகன ஆணையாளர் திணைக்களத்தில் பதிவாகி விற்பனைக்கு வந்த கார் மைக்கரோ ஆகும்.

4. முதலையில் அடி வயிற்றுப் பகுதி தோலில்தான் "புல்லட் புரூவ்" உடை தயாரிக்கிறார்களாம்.

5. உலகில் அதிக எண்ணிக்கையில் முஸ்லிம்கள் உள்ள நாடு இந்தோனேசியா.

6. பல பாடல்களைப் படைத்த பாரதியார் தாலாட்டுப் பாடல்களைப் பாடவே இல்லை.

7. 93 நாடுகளில் ஒரே நேரத்தில் விற்பனையாகி புத்தக உலகில் சாதனன படைத்த "ஹரிபொட்டர்" புத்தகத்தை எழுதியவர் இங்கிலாந்து பெண் எழுத்தாளர் ஜே.கே.ரவுலிங் ஆகும்.

8. ஷேக்ஸபியர் பிறந்த நாளும், இறந்த நாளும் ஒரே தேதியில் தான். பிறந்தது 23-04-1564. இறந்தது 23-04- 1616.

9. கிரேக்க அறிஞர் மெகஸ்தனிஸ் சிறந்த பேச்சாளராக இருந்து சரித்திரத்தில் ஓர் உன்னதமான் இடம் பெற்றாலும், இளம் வயதில் அவருக்குத் திக்குவாய். இழுத்து, இழுத்துத் தடுமாறித்தான் அவரால் பேச முடியும்.

10. சாக்ரடீஸ்க்கு மூன்று மகன்கள் இல்வாழ்க்கை திருப்தி இல்லை. எப்பொழுதும் சண்டை போடும் மனைவி. அவளிடம் மட்டும் சாக்ரடீஸின் தர்க்கம் எடுபடாமல் போனது.

11. லியோ டால்ஸ்டாய் பிறந்த வருடம் - 1828.

12. எகிப்து நாட்டின் கடைசி மன்னன்-பரூக்.

13. இங்கிலாந்தின் சரித்திரத்தை இயற்றியவர்- மெக்காலே.

14. ஏசுவின் முதல் சீடர்- செயிண்ட் ஆண்ட்ரு.

15. பிளாரன்ஸ் நைட்டிங்கேல் என்பவர் நர்சிங் சேவையை சிறப்பான சேவையாகக் கருதிச் செய்தார்.

16. முதன் முதலில் உலகப்படம் வரைந்தவர் -தாலமி.

17. நெல்சன் நெப்போலியனை இறுதியாக வாட்டர் லூ போரில் தோற்கடித்தரர்.

18. வெடி மருந்தைக் கண்டுபிடித்தவர்-ஆல்பிரட் நோபல்.

19.முதன் முதலில் கட்டப்பட்டதும், மிகப் பழமையனதுமான கலங்கரை விளக்கம் எகிப்தில் உள்ளது.

-ஜெயஸ்ரீ மகேந்திரன், ச‌ங்க‌ர‌ன்கோவில்.

ஜெயஸ்ரீ மகேந்திரன் அவர்களது மற்ற படைப்புகள

   முந்தைய குறுந்தகவல் காண

 

 

முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.