........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

குறுந்தகவல்-68

இப்படியும் சில சாதனைகள்!

உலகில் எத்தனையோ சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. ஒரு சில சாதனைகள் அப்படியா? என்று வியக்க வைக்கும். ஒரு சில சாதனைகள் இப்படியும் ஒரு சாதனையா? என்று சொல்ல வைக்கும். அப்படி சில சாதனைகள் இங்கே... சொல்லப்பட்டுள்ளது.

அதிகமான கட்டிடங்கள் கட்டி சாதனை

பிரிட்டிஷ் கட்டிடக் கலை நிபுணர் சர்கில்பர்ட் என்பவர்தான் உலகில் அதிகமான கட்டிடங்களைக் கட்டி சாதனை படைத்தவர். இவர் வாழ்நாளில் 38 கதீட்ரல்கள், 474 சர்ச்சுகள், 23 மடங்கள், 26 பள்ளிகள், 16 கல்லூரிகள், 58 நினைவுச் சின்னங்கள் மற்றும் 27 பொது உபயோகக் கட்டிடங்கள் ஆகியவற்றைக் கட்டிச் சாதனை செய்திருக்கிறார்.

காதல் கடிதத்தில் சாதனை

1875-ஆம் ஆண்டு பெர்ஷிய ஓவியரான மார்சல் டிலெக்தூர் அவருடைய காதலிக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் மொத்தம் 56,25,000 சொற்கள் இடம் பெற்றிருந்தது. நான் உங்களைக் காதலிக்கிறேன் என்கிற வார்த்தைகள் மட்டும் 18,75,000 இடங்களில் இடம் பெற்றிருந்தது. உலகின் மிகப் பெரிய காதல் கடிதம் இதுதான்.

சீட்டுக் கட்டில் கட்டிடம் கட்டி சாதனை

ஜேம்ஸ்வார் நாக் என்பவர் 3650 சீட்டுக்களைப் பயன்படுத்தி 61 அங்குல அகலமும் 11.7 அடி உயரமும் உள்ள கட்டிடத்தை உருவாக்கினார். இதில் ஒரு அதிசயம் என்னவென்றால் இதற்கு இவர் சீட்டுகளை ஒட்டவோ, சேர்க்கவோ எந்தவிதமான பசையையும் பயன்படுத்தவில்லை. இந்த சீட்டுக் கட்டிலான கட்டிட நிகழ்வு 1978 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் தேதி கனடாவின் க்யூபெக் நகரில் நிகழ்த்திக் காட்டப்பட்டது.

தொடர்ந்து கடிதம் எழுதி சாதனை

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு நகரைச் சேர்ந்தவர் ராய்மெண்ட் எல்.காண்ட்வெல் என்பவர் தொடர்ந்து 505 மணி நேரம் தன் கைப்பட கடிதம் எழுதியிருக்கிறார். இத்தொடர் கடிதம் எழுதிய நிகழ்ச்சி 1978 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 16 வரை திடர்ந்து நடைபெற்றதாம்.

அதிக பிள்ளைகள் பெற்று சாதனை

ரஷ்யாவைச் சேர்ந்த ஃபையோமோர்வாயிலேட் - மதாம்வாஸிலெட் தம்பதியர் மொத்தம் 69 பிள்ளைகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர். மதாம்வாஸிலெட் 16 முறை இரட்டைக் குழந்தைகளையும், 7 முறை மூன்று குழந்தைகளையும், 4 முறை நான்கு குழந்தைகளையும் பெற்றெடுத்திருக்கிறார். 1850-ல் இந்த சிறப்பிற்காக ரஸ்ய சக்கரவர்த்தி இரண்டாம் அலெக்ஸாண்டரின் பாராட்டுதலையும் பரிசுகளையும் பெற்றிருக்கின்றனர் இந்தத் தம்பதியர்.

அதிகமாக உபதேசம் செய்தும் சாதனை

ரெவரண்ட் டோனால்டு தாமஸ் என்பவர் நியூயார்க்கின் ப்ரூக்லின் நகரில் தொடர்ந்து 93 மணி நேரம் மத போதனை உபதேசம் செய்து உலக சாதனி ஏற்படுத்தியிருக்கிறார். இதனை 1978 ஆம் ஆண்டு செப்டம்பர் 18 முதல் 22 தேதி வரை நிகழ்த்தியிருக்கிறார். மத போதனை உபதேசத்தில் இவர்தான் இச்சாதனையைச் செய்திருக்கிறார்.

அதிக நாட்கள் உண்ணாவிரதமிருந்து சாதனை

அயர்லாந்து நாட்டின் சிறைக் கைதிகளாக இருந்தவர்கள் ஜான், பீட்டர்க்ரௌலி, தாமஸ்டனோவரன், மிச்சல்புர்கி, மிச்சல்வூரய்லி, கிரிஸ்டோபரப்டான், ஜான்பவர், ஜோசப் ஹன்னி, சீன்ஹன்னஸி ஆகிய ஒன்பது பேர்கள் சிறையில் 94 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து சாதனை படைத்துள்ளார்கள். 1920 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11 ஆம் தேதி முதல் நவம்பர் 12 ஆம் தேதி வரை உணவு எதுவும் சாப்பிடாமல் 94 நாட்கள் உண்ணாவிரதமிருந்த இவர்கள் கடுமையான மருத்துவச் சிக்கிச்சைக்குப் பிறகு காப்பாற்றப்பட்டார்கள்.

அதிகமான வருடத்திற்கு குத்தகை சாதனை

அயர்லாந்து நாட்டை சேர்ந்த ஜான்ஜேம்ஸன் என்பவர் டப்லின் நகரத்திலிருக்கும் அவருக்குச் சொந்தமான மார்க்கெட்டின் ஒரு பகுதியை நகர வளர்ச்சிக் கழகத்திற்கு (சிட்டி கார்ப்பரேசன்) ஒரு லட்சம் வருடத்திற்கு குத்தகைக்குக் கொடுத்திருக்கிறார். உலகில் இவ்வளவு நீண்டகாலத்திற்கு குத்தகைக்கு வழங்கியவர்கள் வேறு யாரும் இருப்பதற்கான வாய்ப்புகளுமில்லை.

அதிகமானவர் கலந்து கொண்ட இறுதிச் சடங்கு சாதனை

எகிப்து நாட்டின் அதிபர் நாசர் இறந்த போது இறுதிச் சடங்கிற்கு சுமார் நான்கு மில்லியன் (40 லட்சம்) மக்கள் கலந்து கொண்டு துக்கம் அனுஷ்டித்து இருக்கிறார்கள். 1970 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் தேதியில் கெய்ரோவில் இந்த நிகழ்வு நடைபெற்றிருக்கிறது. இது ஒரு உலகசாதனை இறுதி ஊர்வலம்.

 -தேனி.எஸ்.மாரியப்பன்.

தேனி.எஸ்.மாரியப்பன் அவர்களின் இதர படைப்புகள

  முந்தைய குறுந்தகவல் காண

 

 

முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.