-
குடையைக் கண்டுபிடித்தவர் ஜான்ஹா வேஸ் என்பவர்
ஆவர்.
-
பாம்பு மிசார் என்ற ஒரு வித பசையின் மூலம்
வாசத்தை அறியும் தன்மையுடையது.
-
இந்தியாவில் உள்ள மிகப் பெரிய மான் இனம்
திகாம்பர் என்ற இனம் ஆகும்.
-
சமுதாயப் பொதுபணிச் சேவைக்கு அளிக்கப்படும்
விருதான ஆர்டர் ஆஃப் மெரிட் என்ற விருதைப் பெற்ற முதல் இருவர் டாக்டர்
ராதாகிருஷ்ணன், அன்னை தெரசா ஆவர்.
-
பிரமிடுகளுக்குப் பிரசித்திப் பெற்ற எகிப்து
குண்டூசியை முதலில் கண்டுபிடித்த பெருமையும் பெறுகிறது.
-
மனித உடலில் வேலையில்லாத உறுப்பு குடல்வால்.
-
உயிர்காக்கும் உலோகம் ரேடியம்.
-
தமிழ்நாட்டில் கடல் மட்டத்தை விட மிக உயரத்தில்
உள்ள ஏரி உதகமண்டல ஏரியாகும்.
-
பத்திரிக்கைகளே இல்லாத நாடு காம்பியா.
-
எந்த எண்ணாலும் மீதியின்றி வகுக்க முடியாத எண்
37.
-
பாட்டாலஜி எனும் துறை, முழுக்க முழுக்க முட்
செடிகள் மட்டுமே ஆராயும் துறையாகும்.
-
கன்னியாகுமரி 1956-ம் ஆண்டு தான் தமிழகத்துடன்
இணைக்கப்பட்டது.
-
உலகிலேயே முதன் முதலில் சாலை அமைத்தவர்கள்
ரோமானியர்கள் தான்.
-
இந்திய எல்லைக்கு உட்பட்டு மொத்தம் ஆயிரத்து
இருநூறு தீவுகள் உள்ளன.
-
பூமியில் வாழும் மிருகங்களிலேயே பெரியது கடலில்
வாழும் ப்ளூவேல் என்ற நீலத் திமிங்கலம் தான்.
-
காசினி எனும் விண்கலம் 1966-ம் ஆண்டு ஏப்ரல்
மாதம் விண்ணில் செலுத்தப்பட்டது.
-
முதன் முதலில் முத்து கி.மு.12ம் நூற்றாண்டில்
சீனக் கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.
-
முதன் முதலில் பவழம் கி.பி.3ம் நூற்றாண்டில்
கிரீஸ் கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.
-
முதன் முதலில் உப்பு சீனக் கடலில் கி.மு.2200ம்
ஆண்டு எடுக்கப்பட்டது.
-
எட்வர்ட் எலியட்ஸ் என்பவர் பிரிட்டிஷ் ஆட்சியின்
போது சென்னையில் நீதிபதியாக இருந்தவர். அவருடைய பெயர்தான் எலியட்ஸ் சாலைக்கு
சூட்டப்பட்டது.
-
உஸ்மான் என்பவர் பிரிட்டிஷ் ஆட்சியில் கவர்னரின்
ஆலோசகராக இருந்தவர். அவருடைய பெயர்தான் உஸ்மான் சாலை எனப் பெயர் பெற்றது.
-
ஹென்றி சேமியர்ஸ் என்பவர் கெட்ராஸ் கிளப்பை
நிறுவினார். எனவே தான், அடையாற்றின் கரையில் இருக்கும் இந்தக் கிளப்பை நோக்கிச்
செல்லும் சாலைக்கு சேமியர்ஸ் சாலை எனப் பெயர் பெற்றது.
-
பாந்தியன் என்ற பெயரில் ஒரு தேவாலயம்
எழும்பூரில் உள்ளது. அதனால் தான் அங்கு சாலைக்கு பாந்தியன் சாலை என பெயர்
சூட்டப்பட்டது.
-
நிறமாலையைக் காண ஸ்பெக்ட் ராஸ்கோப் எனும் கருவி
பயன்படுகிறது.
-
மேகங்களின் திசை, உயரம் ஆகியவை அறியப் பயன்படும்
கருவி நீபோஸ்கோப்.
-
புதுவகையான டிசைன்களை உருவாக்கப் பயன்படும்
கருவி கலைடாஸ்கோப்.
-
மிகக் குறைந்த வெப்ப நிலையை அளவிட பயன்படும்
கருவி கிரையாஸ்கோப்.
-
அச்சிட்ட படங்களைத் திரையில் விழச் செய்ய உதவும்
கருவி எபிடாஸ்கோப்.
-
இராபர்ட் டி நொயிலி என்ற இத்தாலியர் 1605- இல்
தமிழகம் வந்தார். தமிழ் மேல் கொண்ட பற்றினால் தமது பெயரை 'தத்துவ போதக சுவாமிகள்'
என்று மாற்றிக் கொண்டார்.
-
வீரமா முனிவரின் இயற்பெயர் கொன்ஸ்டான்ஸ் ஜோசப்
பெஷி என்பதாகும். கொன்ஸ்டான்ஸ் என்றால் தைரியம் என்று பொருள். இவர் தமது பெயரை
'தைரியநாத சுவாமி' எனச் சிறப்பாக வைத்துக்கொண்டார். அதுவே நாளடைவில் 'வீரமாமுனிவர்'
ஆனது.
-
டாக்டர்.ஜி.யு. போப் 'தமிழ் மாணவன்' என்றே
அழைக்கப் பட்டார்.
-
கிறிஸ்தவக் கம்பர் எனப்பட்டவர் எச். ஏ.
கிருஷ்ணப்பிள்ளை ஆவார். இவர் இரட்சண்ய யாத்திரிகத்தை எழுதினார்.
-
தமிழ் நாவலின் தந்தை எனப்படுபவர் மாயூரம்
வேதநாயகம் பிள்ளை ஆவார்.
-
ஆண்டுதோறும் நவம்பர் 10ம் தேதி போக்குவரத்து
தினம் கொண்டாடப்படுகிறது.
-
பத்திரிமையாளர்களுக்குப் பாதுகாப்பு இல்லாத
நாடுகளின் பட்டியலில் முதலிடம் வகிக்கும் நாடு இராக்.
-
சுமோ என்று அழைக்கப்படும் மல்யுத்த விளையாட்டு
தோன்றிய நாடு ஜப்பான்.
-
புனித நகரமான மெக்கா சவுதி அரேபியாவில் உள்ளது.
-
இந்தியாவிலும் வங்க தேசத்திலும் கங்கை நதி
ஓடுகிறது.
-
அமேரிக்காவில் கென்சிங்டன் நகரில் தோன்றிய சக்தி
வாய்ந்த மின்னல் தரையிறங்கியது. அவ்விடத்தில் ஓர் அடி அகலமும், 30அடி ஆழமும்
கொண்ட பள்ளம் ஏற்பட்டது. அதிலிருந்து நீ ஊற்றெடுத்து ஓடியது.
-
உலகில் அதிக நாள் உயிர் வாழும் உயிரினமாகத்
திகழ்வது ஆமைகள். 300ஆண்டுகளுக்கு மேல் வாழும் ஆமைகள் உள்ளன.
-
கடல் எனப் பெயர் பெற்ற ஏரிகள் காஸ்பியன் கடல்,
சாக்கடல், ஆரல்கடல் முதலியனவாகும்.
-
பாரதத்தின் முதல் கல்வி அமைச்சர் அபுல் கலாம்
ஆசாத்.
-
காசநோய் நுரையீரலைத் தாக்கும்.
-
உலகில் மிகப் பெரிய மியூசிக்கல் சேர் போட்டி
1985-ம் ஆண்டு செப்டம்பர் 6-ம் தேதி அமெரிக்காவில் உள்ள இன்டியானா நகரில்
நடந்தது. 5,151 பேர் கலந்து கொண்ட இந்தப் போட்டியில் பில்பிரான்சன் என்பவர்
வெற்றி பெற்றார்.
-
சர்க்கரை நோய் கணையம் மற்றும் சிறுநீரகம்
ஆகியவற்றை பாதிக்கும்.
-
யானைக்கால் நோய் கால்களைப் பாதிக்கின்றன.
-
பூமியின் மொத்த நிலப்பரப்பே 29 சதவீதம்தான்.
ஆனால் அதையும் விட பசிபிக் பெருங்கடலின் பரப்பளவு 35.5%.
-
பரப்பளவில் இலங்கையைப் போல இரு மடங்கு பெரியது
தமிழ்நாடு.
-
யானைத் தந்தங்கள் சிறிது மஞ்சள் கலந்த வெள்ளை
நிறமாக இருக்கும். ஆனால், ஆப்பிரிக்க யானைகளில் ஒரு சிலவற்றிற்கு கறுப்பு நிறத்
தந்தங்கள் உள்ளன.
-
கஸ்தூரிமானின் கொம்புகள் பூமியில்
புதைந்திருக்கும் கிழங்குகளைத் தோண்டி உண்ணவும், சண்டையிடவும் உதவுகின்றன.
-
மின்னல் தாக்கி அதிகளவில் பாதிக்கப்படும் நாடு
பனாமா.
-
வெளவால்களின் குரலை மனிதர்கள் கேட்க முடியாது.
-
இடுக்கி நீர்மின் திட்டம் கனடா நாட்டு உதவியுடன்
கட்டப்பட்டது.
-
வெளவால்களின் குரலை மனிதர்கள் கேட்க முடியாது.
-
ஒப்பிலக்கணத்தின் தந்தை என வீரமா முனிவர்
அழைக்கப்படுகிறார்.
-
பசுமைப் புரட்சி முதன் முதலில் மெக்ஸிகோ
நாட்டில் துவங்கியது.
-
தேசிய திரைப்பட விழாவின் சின்னமாக மயில் உள்ளது.
-
1971-ம் ஆண்டு முதல் தமிழக அரசு திருவள்ளுவர்
ஆண்டை பயன்படுத்த ஆணையிட்டது.
-
உலகின் மிகப் பெரிய அருங்காட்சியகம்
லண்டனிலுள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகம் ஆகும்.
-
விதியின் மனிதன் என மாவீரன் நெப்போலியன்
அழைக்கப்படுகிறார்.
-
கைரேகையைப் போலவே நாக்கில் உள்ள வரிகளும்
ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.
-
கோலா கரடிகள் இடதுகை பழக்கம் கொண்டவை.
-
பட்டாம்பூச்சிகள் கால்களால் சுவையை உணரும்.
-
எவ்வளவு நாள் ஆனாலும் கெட்டுப் போகாத உணவு தேன்.
-
மனித உடலில் சதை அழுத்தமாக உள்ள பகுதி நாக்கு.
-
தார் பாலைவனம் பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான்,
குஜராத் ஆகிய மாநிலங்களில் பரவியுள்ளன.
-
தேனீ ஒரு செய்தியை தன் இனத்தில் உள்ள மற்றொரு
தேனீயிடம் 8 என்ற எண் வடிவத்தில் நடனமாடித் தெரிவிக்கிறது.
-
ஆஸ்திரேலிய தேனீக்களுக்குக் கொடுக்கு இல்லை.
இதனால் அவை கொட்டுவதில்லை.
-
தேனீக்களுக்கு மொத்தம் ஐந்து கண்கள் உள்ளன.
தலையின் உச்சியில் மூன்று கண்களும், முன்பக்கத்தில் இரண்டு கண்களூம் உள்ளன.
-
தன் காலடியைத் தரையில் வைக்காத பறவை ஹரியாஸ்
என்பதாகும்.
-
கொத்தமல்லியில் வைட்டமின் பி, பி2 மற்றும் சி
ஆகிய சத்துக்கள் உள்ளன.
-
பாலைவனங்கள் பெரும்பாலும் கடக, மகர ரேகைகளின்
அருகில் அமைந்துள்ளன.