........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
a |
a |
குறுந்தகவல்-79 முத்துக்கமலம் சிறுகதைகள் ஆய்வு
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி இயக்ககத்தில் தமிழ்த் துறையில் முத்துக்கமலம் இணைய இதழில் வெளியான சிறுகதைகள் ஆய்வியல் நிறைஞர் (M.Phil.,) படிப்பிற்காக ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு இருக்கிறது. "முத்துக்கமலம் இணையவழிச் சிறுகதைகள் - மதிப்பீடு" என்கிற தலைப்பில் மதுரை மாவட்ட காவல்துறையில் சார்பு ஆய்வாளராகப் பணிபுரிந்து வரும் திண்டுக்கல்லைச் சேர்ந்த த.சுதந்திராதேவி (பதிவு எண்: A4C 6060007) என்பவர் திருச்சிராப்பள்ளி, லால்குடி, டாக்டர் கலைஞர் கலை அறிவியல் கல்லூரி (பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி) யில் விரிவுரையாளராகப் பணிபுரியும் முனைவர். துரை. மணிகண்டன் அவர்களை ஆய்வுக்கான நெறியாளராகக் கொண்டு ஆய்வு செய்துள்ளார். இந்த ஆய்விற்காக முத்துக்கமலம் இணைய இதழில் வெளியான சிறுகதைகளில் 1. வர்ணம் இழந்தாலும் வானவில் - வெ.சுப்பிரமணிய பாரதி. 2. அப்பா (ஏ) மாற்றி விட்டார். - நெய்வாசல் நெடுஞ்செழியன். 3. ஒரு இந்தியக் கனவு - என்.கணேசன். 4. ப்ரியமுள்ள வாலண்டைனிடமிருந்து....! -ஆல்பர்ட், அமெரிக்கா. 5. இன்று அவர்கள்- நாளை...? -இராம. வயிரவன். 6. இறை அச்சம் - இமாம் கவுஸ் மொய்தீன். 7. களவு போன கனவு - வி.ல.நாராயண சுவாமி. 8. வித்யாகிட்ட சொல்லிடாதீங்க... - குகன். 9. காமம் எனும் காதல் நோய்! - வேந்தன் சரவணன். 10. சிறைக்குள் எரிந்த மனம்! - நோர்வே நக்கீரா. 11. அன்புள்ள அக்கா தங்கைகளுக்கு...! - ராம்ப்ரசாத். -என்கிற 11 சிறுகதைகள் மட்டும் அவரால் ஆய்விற்காக எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தன. இந்த ஆய்வுப்பணி முடிவடைந்த நிலையில் இந்த ஆய்வேடு தயார் செய்யப்பட்டு மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் தொலைநிலைக் கல்வி இயக்ககத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. " த.சுதந்திராதேவி ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றிட முத்துக்கமலம் ஆசிரியர் குழுவின் இனிய நல்வாழ்த்துக்கள்." -தாமரைச்செல்வி
|