........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

குறுந்தகவல்-80

நாகலிங்கப் பூ

நாகலிங்கப்பூ மரம், தென்னமெரிக்காவின் வடபகுதி, வெப்பவலய அமெரிக்கா, தென் கரிபியன் பகுதிகளைத் தாயகமாகக் கொண்டது.  இதைத் தாவரவியல் பெயராக "Couroupita guianensis" என்று அழைக்கிறார்கள். இது "மக்னோலியோபைட்டா" எனும் பிரிவில் "மக்னோலியோப்சிடா" எனும் வகுப்பில் "எரிகேலெஸ்" வரிசையில் "லெசித்திடேசியே" எனும் குடும்பத்தில் "கூருபிட்டா" எனும் பேரினமாக உள்ளது. இந்த மரம் 30 முதல் 35 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. இந்த மரத்தின் பூ மரத்தின் மேல் பகுதியில் பூப்பதில்லை. வேர்ப்பகுதிக்கு மேலேயும் கிளைகள் இருக்கும் பகுதிக்குக் கீழேயும் உள்ள இடைவெளிப் பகுதியில் தனியாகக் கிளை பரப்பி அதில் பூக்களும் காய்களும் நிறைந்து கிடக்கின்றன. இதில் பூக்கள் உருண்டை வடிவில் மொட்டுக்களாக இருக்கும். இந்த மொட்டுக்கள் மலரும் போது சிகப்பு நிற இதழ்கள் விரிந்து உள்ளே நாகப்பாம்புகள் குடை விரித்திருக்க அதனுள்ளே சிவலிங்கம் இருப்பது போன்ற அமைப்பில் அருமையான பூவாக மலர்கிறது. சில மொட்டுக்கள் காயாகும் போது பெரிய உருண்டை போல் இருக்கிறது. இந்த அதிசயமான பூக்கள் தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சில சிவாலயங்களிலும், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் சில இடங்களிலும் இருக்கிறது. இந்த நாகலிங்கப்பூ சில மூலிகை மருந்துகள் தயாரிக்கப் பயன்படுகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

-தாமரைச்செல்வி.

     முந்தைய குறுந்தகவல் காண

 

 

முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.